கோலி எல்லாம் இருந்தா 42 கோடிக்கு ஏலம் வாங்கி இருப்பாங்க. 26 போட்டி மட்டுமே விளையாடிய வீரருக்கு ஏன் இவ்வளவு சம்பளம் – கொந்தளித்த சுரேஷ் ரெய்னா.

ஐபிஎல் 2024க்கான ஏலமானது துபாயில் நேற்று நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வீரர்களை போட்டி போட்டு வங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டார்கை அதிக விலையான 24.75 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை வாங்கியிருந்தது. அதற

By ·

ஐபிஎல் 2024க்கான ஏலமானது துபாயில் நேற்று நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வீரர்களை போட்டி போட்டு வங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டார்கை அதிக விலையான 24.75 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை வாங்கியிருந்தது. அதற்க்கு அடுத்தபடியாக ஹைதராபாத் அணி 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. இவர் சர்வதேச போட்டிகளில் 2 கோப்பைகளையும் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் கேப்டனாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று இருந்தார்.

இது போன்ற வெளிநாட்டு வீரர்களை ஐபிஎல் அணிகள் அதிக விலைக்கு எடுத்தது இந்திய ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அதற்க்கான காரணம் என்னவென்று பார்த்தால் இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியிருந்தது. அந்த வீரர்களையே ஐபிஎல் அணிகள் தற்போது கோடிகளை கொட்டி வாங்கியது. ஒரு வீரருக்கு இவ்வளவு கோடி கொடுத்து வாங்க கூடாது என்று ரசிகர்கள் ஐபிஎல் அணிகளை விமர்சித்து வருகின்றனர்.

தோனி பும்ரா போன்ற இந்திய அணியில் நட்சத்திர வீரர்களுக்கு 15 கோடிக்கும் குறைவான அளவில் சம்பளம் கொடுக்கும் போது ஆஸ்திரேலியா வீரர்களுக்கு எதிர்ப்பு என்று இருபது கோடி 24 கோடி கொடுப்பது சரியல்ல என்று சுரேஷ் ரெய்னா அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அவர் கூறுகையில் பும்ரா 12 கோடி, எம் எஸ் தோனி 12 கோடி, முகமது சமி போன்ற வீரர்களுக்கு ஐந்து கோடி மட்டுமே கொடுக்கும் பொழுது அவர்களும் உங்களுடைய அணிக்காக விளையாடிகிறார்கள்.

ஆனால் இங்கே கடந்த எட்டு வருடமாக ஐபிஎல் தொடரில் விளையாடாத ஒரு வீரர் மீண்டும் ஐபிஎல் அனுபவத்தின் விளையாட வருவதற்கு எப்படி இவ்வளவு கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இது சரியல்ல என்றும் அவர் கூறினார் அவர் மேலும் கூறுகையில் விராட் கோலி போன்ற வீரர்கள் இது போன்ற காலத்தில் பங்கு பெற்றால் அவர்கள் 42 கோடி வரை அவர் சென்று இருப்பார் என்றும் அவர் கூறியிருந்தார். 26 போட்டிகளை மட்டும் விளையாடிய ஒரு வீரருக்கு ஏன் இவ்வளவு கோடி கொடுத்து ஏலத்தில் எடுகின்றனர் என்று புரியவில்லை.

இது குறித்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில் விதிமுறையில் சில மாற்றங்களை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் ஒரு அணிக்கு 200 கோடிகள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் அதில் 150 கோடிகள் இந்திய வீரர்களுக்கும் மீதி 50 கோடியே வெளிநாட்டு வீரர்களுக்கும் கொடுக்கலாம். ஒரு வேலை கோலி போன்ற வீரர்கள் இன்றைய காலத்தில் கலந்து கொண்டிருந்தால் அவர் 42 கோடிகளுக்கு வரை சென்று இருப்பார் என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை