தோனியுடன் ஜடேஜாவுக்கு ஏன் பிளவு ஏற்பட போகிறது – CSK லெஜண்ட்ஸ் இடையேயான வதந்திகள் குறித்து பேசிய வாசிம் அக்ரம்.

ஐபிஎல் 2023 தொடரின் குவாலிபைர் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பைகளை வென்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்த ஜடேஜா கேப

By ·

ஐபிஎல் 2023 தொடரின் குவாலிபைர் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பைகளை வென்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்தது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்த ஜடேஜா கேப்டன் தோனியுடன் மனகசப்பு ஏற்பட்டுள்ளதாக ஷோசியல் மீடியாவில் பல தகவல்கள் வெளியானது.

ஆனால் அது உறுதியாக தெரியவில்லை, இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியின் போது ஜடேஜா விருதைப் பெறுவது போன்ற ஒரு படத்தைப் பகிர்ந்து அதில் அப்ஸ்டாக்ஸுக்கு தெரிகிறது ஆனால் சில ரசிகர்களுக்கு தெரியவில்லை என்று பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தனர்.மேலும் சமீபத்தில் நடந்த CSK vs DC போட்டியில் கூட ஜடேஜா சில மனதை உருக்கும் விஷியங்களை கூறினார்.

“நான் களமிறங்கிய போது தோனி தோனி என்று ரசிகர்கள் அவரை அழைத்து கொண்டே இருக்கின்றனர். நான் ஆட்டமிழக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றனர் என்று பதிவிட்டிருந்தார். அதற்க்கு பிறகு பைனல் போட்டிக்கு முன்னர் கூட தோனியுடன் ஜடேஜா விவாதத்தில் இருந்தது போன்று பல வீடியோ பதிவுகள் வெளியானது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பல கருத்து கூறியது நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் சமீபத்திய பேட்டி ஒன்றி இதை பெட்ரி பேசியுள்ளார்.

வாசிம் அக்ரம் கூறியது :

அவர் பேசுகையில் “இன்றைய சோசியல் மீடியா யுகத்தில் ஒருவர் வீட்டில் அமர்ந்து செய்தி எழுதினால் அது பெருமளவு வைரலாகி வருகிறது. ஜடேஜா எத்தனை வருடங்களாக சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார் என்று எனக்கு தெரியாது. ஆனால் தோனி அவருக்கு ஆதரவளித்து ஜடேஜாவுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார். இத்தனை வருடங்களாக ஜடேஜாவுக்கு கேப்டனாக இருந்து வருகிறார் தோனி. அவருடன் ஜடேஜா ஏன் பிளவுபடுவார்? என்றார் அக்ரம்.

மேலும் அவர் கூறுகையில் ” எனக்கு தோனி பற்றி தெரிந்த வரையில், அவருக்கு ஏதாவது பிரச்சனை என்றால், அவர் ஜடேஜாவிடம் பேசி விஷயங்களைச் சரிசெய்வார். ஜடேஜாவும் தனது கேப்டனின் ஆதரவே தனது ஆட்டங்களுக்குப் பின்னால் இருந்ததை ஒப்புக்கொண்டார். இது முன்னேறுவதற்கு இருந்து முன்னறிருந்தே உதவி செய்வதாகும். இருவருமே பாராட்டுக்குரியவர்கள்” என்று அந்த பேட்டியில் ஜடேஜா மற்றும் தோனி விஷயம் குறித்து வாசிம் அக்ரம் கூறினார்.

சொல்லப்போனால் கடந்த 2022 ஆம் ஆண்டு கூட ஜடேஜாவுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் ஏதோ பிரச்சனை இருப்பதாகவும் சென்னை அணியை விட்டு ஜடேஜா பிரிய போகிறார் என்று ஜடேஜாவின் சோசியல் மீடியா பக்கங்களில் வரும் பதிவுகளை வைத்து கூறப்பட்டது. ஆனால் அவர் வெளியேறவில்லை, இந்த சீசன் சென்னை அணிக்காக விளையாடி 5 வது கோப்பையையும் சென்னை அணிக்கு பெற்று தந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை