இந்தியாவை வீழ்த்தி கெத்து காட்டிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் – போட்டிக்கு பிறகு சொன்னது என்ன?
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வ
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மழைக்கு மத்தியில் 1 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மீண்டும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டியில் இந்தியா சுலபமான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியானது பாரபடாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து இந்திய களமிறங்கிய இந்திய அணியின் கேப்டனாக ஹேர்த்திக் பாண்டியா வர ரோஹித் ஷர்மாவிற்கும், விராட் கோலிக்கும் இந்த போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டது.
ஆனால் இந்தியா நினைத்தது போன்று போட்டியானது செல்லவில்லை. குறிப்பிடத்தக்க வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மிகவும் சிறப்பாக செயல்பாடு இந்தியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதனால் இந்தியாவினால் 181 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்த நிலையில் அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்களை தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கட்டுப்படுத்தினால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய அவர் கூறுகையில் “வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அரைசதம் அடிக்கும்போதும் சதம் அடிக்கும்போதும் அணி வெற்றிபெறுவத்தை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியா போன்ற தரமான பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக விரைவாக ஸ்கோர் செய்வதற்கான வழிகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி ரன்களை அடித்தது எங்களுக்கு திருப்தியாக இருந்தது.
முதல் வெற்றியை பதிவு செய்துள்ளோம், தொடரை கைப்பற்ற அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். எங்களுடைய வீரர்கள் மிகவும் கடுமையாக போராடினார்கள். எங்களினால் என்ன முடியும் என்பதை காட்டினோம். ஆடுகளும் மிகவும் சவாலாக இருந்தது. எங்களுடைய வீரர்கள் பேட்டிங்கிலும், பௌலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார்கள். இதோ போன்று நாங்கள் சரியாக செயல்பாட்டால் கண்டிப்பாக எங்களினால் சாதிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புதாக கூறினார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சாய் ஹாப்.