இங்கிலாந்தின் பாஸ்பால் முறை இந்தியாவில் எடுபடுமா? பென் ஸ்டோக்ஸ் சொன்ன சூசகமான பதில்.

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 தொடரானது தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இதில் முதல் மற்றும் இரண்டவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற பிறகு இந்த தொடரில் ஆஸ்திரேலியாவே வெற்றி பெரும் என்று நினைத்தார்கள். ஆனால் அதற்கு பிறகு 3 டெஸ்ட் போட்டிகளும் அதிர்ச்சிக்கு பஞ்சம் இல்லை என்று

By ·

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 தொடரானது தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இதில் முதல் மற்றும் இரண்டவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற பிறகு இந்த தொடரில் ஆஸ்திரேலியாவே வெற்றி பெரும் என்று நினைத்தார்கள். ஆனால் அதற்கு பிறகு 3 டெஸ்ட் போட்டிகளும் அதிர்ச்சிக்கு பஞ்சம் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து விளையாடும் பாஸ்பால் முறை எடுபட வில்லை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

மேலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களே இதற்கு பதிலாக நாம் பாரம்பரிய டெஸ்ட் முறையில் விளையாடி இருந்தாலே வெற்றி பெற்றிருக்கலாம் என்று பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரையும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் ஆஸ்திரேலிய ஊடங்களும் இங்கிலாந்து அணியை விமரிசித்து இருந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு இது ஒரு தன்மான பிரச்சனையாக மாறியது.

இதனையடுத்து முழு வீச்சில் விளையாடிய இங்கிலாந்து 3 வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற, 4வது போட்டி மழை காரணமாக தடைபட்டது. இருந்த போதிலும் அந்த போட்டியில் மழை இல்லை என்றார் இங்கிலாந்து அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்பு இருந்தது. இந்நிலையில் 5வது போட்டி பல அதிர்ச்சிகளை கொடுத்து இங்கிலாந்து அணியானது வெற்றி பெற்று இந்த தொடரை சமன் செய்து பாஸ்பால் முறையை குறித்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தது இங்கிலாந்து.

இந்தியாவில் பாஸ் பால் எடுபடுமா? :

இந்நிலையில் போட்டி முடிந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் இந்தியாவிலும் பாஸ் பால் முறை எடுபடுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் “எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது, நாங்கள் நியூலிழந்து அணியை அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினோம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எங்களால் அதைச் செய்ய முடியவில்லை, பாகிஸ்தானுக்கு எதிராகச் எங்களினால் இதனை செய்ய முடியவில்லை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் இதனை எங்களினால் செய்ய முடியவில்லை என்பது எனக்கு நினைவிருக்கிறது.

எனவே இந்தியாவுக்கு எதிராக அதைச் செய்ய முடியுமா என்று யாருக்குத் தெரியும், காலம்தான் பதில் சொல்லும் என்றார் பென் ஸ்டோக்ஸ். இவர் சொல்வதை போல நியூசிலாந்தை 3-0 என வீழ்த்திய இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது. இருப்பினும் அந்த தொடரில் அவர்கள் பாஸ்பால் அணுகுமுறையை கொண்டு 2-1 என்ற கணக்கில் வென்றனர்.

பின்னர் பாகிஸ்தானில் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இங்கிலாந்து கடைசியாக 2012-13 இல் இந்தியாவில் வென்றது. இருந்த போதிலும் அதற்கு பிறகு இங்கிலாந்து 4-0 மற்றும் 3-1 என்ற கணக்கில் இந்தியா இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்நிலையில் 2024-ம் ஆண்டு முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தும் இலங்கையும் வெல்ல இருப்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை