என்னை பொறுத்தவரையில் TOP 5 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் கோலியும் இருப்பார் – வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கருத்து.
இந்தியாவின் முகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்பவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த இவர் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 500 போட்டிகளை விளையாடிய வீரர் என்ற சாதனனயை படைத்தார். மேலும்
இந்தியாவின் முகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்பவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த இவர் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 500 போட்டிகளை விளையாடிய வீரர் என்ற சாதனனயை படைத்தார். மேலும் இன்னமும் கிரிக்கெட் வரலற்றில் தன்னுடைய 500வது போட்டியில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனைக்கு இனமும் 13 ரன்கள் உள்ளது.
நேற்று தொடங்கிய போட்டியில் இந்தியா அணி கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு முன்னேறியது அதற்கு காரணம் விராட் மற்றும் ஜடேஜா. மேலும் இவர்கள் இருவரும் இணைத்து விழும் விக்கெட்டுகளை தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் இந்தியாவை 4 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களுக்கு கொண்டு சென்றார். இப்படிபட்ட நிலையில் தான் விராட் கோலியை கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார் விராட் கோலி.
நான் விராட் கோலியை என்னுடைய பட்டியலில் நான் சச்சினுக்குப் பின்னால்தான் மதிப்பிடுவேன். நான் பார்த்த மற்றும் அவருடன் விளையாடிய மிகச்சிறந்த வீரர்களில் சச்சினும் ஒருவர். என்னுடைய பட்டியலில் ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரராக நான் பிரையன் லாரா, விவ் ரிச்சர்ட்ஸ் போன்றவர்களை சொல்வேன். ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வக் போன்றவர்களுடன் நான் இளைஞனாக இருந்தபோது விளையாடினேன்.
மேலும் இங்கிலாந்தில் இருந்து கிரஹாம் கூச் (கிரிக்கெட்டின் தந்தை) மற்றும் பாக்சிதான் லெஜெண்ட் ஜாவேத் மியான்டட் ஆகியோரும் உள்ளனர், அவர்களுக்கு எதிராக நான் பல ஆட்டங்களில் விளையாடவில்லை. ஆனால் அவர்களின் கிரிக்கெட்டும் விக்கெட்டுகளின் மீதான அவர்களின் மதிப்பு எனக்கு விராட் கோலியையும் நினைவூட்டியது. விராட் கோலி மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்.
அதனால் நான் பார்த்த முதல் 4, முதல் 5 சிறந்த கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியின் பெயரை நான் கண்டிப்பாக சேர்ப்பேன் என்றார். மேலும் அவர் பேசுகையில் “நான் விராட் கோலியுடன் ஒருமுறை பேசும் போது அவர் விளையாட்டின் மீதான ஆர்வத்தைப் புரிந்து கொண்டேன். அவர் விளையாட்டில் ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்புகிறார். நான் மேற்கிந்தியத் தீவுகளுக்கான தேர்வாளராக இருந்தபோது அவருடன் உரையாடியது எனக்கு நினைவிருக்கிறது.
அப்போது விராட் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். நீங்கள் வெளிப்படையாகேவே சொல்லாலும் அவர் சிறந்தவராக இருக்க விரும்புகிறார் என்று. அவ்வாறு அவர் சிறந்தவராக இருக்க யாரிடமிருந்தும் ஆலோசனையை பெறவும் அவர் தயாராக இருந்தார். சாதனை மூலம் எனக்கு ஆச்சரியமில்லை. அவரிடம் உள்ள ஆர்வம் மற்றும் தான் செய்யும் அனைத்திலும் டாப் 3 அல்லது 5வது இடங்களில் இருக்க விராட் கோலி விரும்புகிறார் என்றார் கர்ட்னி வால்ஷ்