இவருக்கு இருக்கும் உடற்தகுதிக்கு இன்னும் 4 வருடங்களுக்கு கூட விளையாடலாம் – சல்மான் பாட்.

நம்பர் 19, 2023 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில், ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இல் இந்தியா இதயத்தை உடைக்கும் தோல்வியை சந்தித்தது. இறுதி வரையிலான 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால், தோல்வி அவர்களின் சாம்பியன்ஷிப் கனவுகளை சிதைத்தது.

By ·

நம்பர் 19, 2023 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில், ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இல் இந்தியா இதயத்தை உடைக்கும் தோல்வியை சந்தித்தது. இறுதி வரையிலான 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால், தோல்வி அவர்களின் சாம்பியன்ஷிப் கனவுகளை சிதைத்தது. மெதுவான மற்றும் உலர்ந்த விக்கெட்டில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பந்து பேட்டுக்கு வரத் தவறியதால், பந்து வீச்சாளர்கள் நிலைமையை திறமையாகப் பயன்படுத்திக் கொண்டனர், இதனால் இந்திய அணி பேட்டிங்கில் ரன் குவிக்க தவறியது.

விராட் கோலியின் நெகிழ்ச்சியான அரை சதம், கே.எல். ராகுலின் உறுதியான பங்களிப்பு மற்றும் ரோஹித் ஷர்மாவின் விரைவான தொடக்கத்தின் காரணமாக, இந்தியா 240 ரன்களை சுமாரான அடித்து இலக்காக பதிவு செய்ய முடிந்தது. இரண்டாவது இன்னிங்ஸில், இந்தியா ஒரு பாராட்டத்தக்க சண்டையை வெளிப்படுத்தியது, ஆஸ்திரேலியாவை 40-3 என்று குறைத்தது. இருப்பினும், கடும் பனிப்பொழிவுடன் இருந்ததால் இந்திய அணி அதன் பின் தோல்வியை தழுவியது. மேலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் 137 ரன்கள் எடுத்து மேட்ச்-வின்னிங்ஸ் விளையாடினார்.

அடுத்த வருடம் உலக டி20 உலக கோப்பை தொடரானது 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்காக இந்திய அணியை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் களம் இறக்கி உள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார்.தற்போது ஆஸ்திரேலியா அணியை நேற்று இந்திய அணி எதிர்கொண்டதில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அணியை வீழ்த்தியது. மேலும் முன்னணி வீரர்கள் ஆன ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்த வருடம் உலகக் கோப்பை 2024 விளையாடுவோர்களா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதற்குப் பல கிரிக்கெட் வல்லுநர்கள் இருவரும் கட்டாயம் டி20 உலக கோப்பை அணியில் இருக்க வேண்டும். அதில் ரோஹித் சர்மா தான் கேப்டன் ஆக இருக்க வேண்டும் என்று அவர்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் இது குறித்து பாகிஸ்தானியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறுகையில்,

விராட் கோலியின் உடல் தகுதி மற்றும் அவர் விளையாட்டுக்கான எடுக்கும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பார்க்கும் பொழுது அவர் அடுத்து நான்கு வருடங்களுக்கு விளையாடாமல் போவதற்கான எந்த ஒரு காரணங்களும் எங்களுக்கு தெரியவில்லை. அவரது உடல் தகுதி மற்றும் தீவிர உடற்பயிற்சியால் அவரால் 38 வயது வரை அவரால் நன்றாக விளையாட முடியும். ரோகித் சர்மாவை யாருடனும் ஒப்பிட முடியாது. இருப்பினும் அவர் நீண்ட நாட்கள் ஆகும். ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தலாம் என்று அவர் நினைக்கலாம். ஆனால் அந்த இரண்டு வடிவங்களை விட டி20 கிரிக்கெட் எளிமையாக இருக்கும். எனவே அவர் தாராளமாக விளையாடலாம் என்றும் அவரும் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை