2011 இந்தியா vs இலங்கை போட்டியில் தோனி அடித்த அந்த சிக்ஸர் – நினைவிடமாக மாற்றப்பட்ட வான்கடே மைதானம் வீடியோ உள்ளே.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு இந்தியாவின் மட்டுமல்லாமல் உலக அளவில் அவருக்கு அதிக அளவு ரசிகர் பட்டாளம் உள்ளது. அதற்க்கு காரணம் அவர் மிகவும் கடினமான சூழலிலும் கூட மிகவும் கூலாக இருந்து அந்த சூழ்நிலையை சமாளித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வார்.எம் எஸ்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு இந்தியாவின் மட்டுமல்லாமல் உலக அளவில் அவருக்கு அதிக அளவு ரசிகர் பட்டாளம் உள்ளது. அதற்க்கு காரணம் அவர் மிகவும் கடினமான சூழலிலும் கூட மிகவும் கூலாக இருந்து அந்த சூழ்நிலையை சமாளித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வார்.எம் எஸ் தோனி கேப்டனாக இருந்த போது ஐபிஎல்லில் மட்டுமல்லாமல், சர்வதேச போட்டிகளிலும் பல கோப்பைகளையும் வாங்கி குவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு உலக கோப்பை :
இவர் கேப்டனாக இருந்த போது 2007ஆம் ஆண்டு சர்வதேச T-20 கோப்பையையும் ,2011ஆம் ஆண்டு உலக கோப்பையையும்,2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியும்,2010 மற்றும் 2016ஆம் ஆண்டு ஆசிய கோப்பையையும் வென்று உள்ளார்.அனைத்து இந்திய ரசிகர்களாலும் மறக்க முடியாத போட்டி என்றால் அது 2011ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியாகும். இறுதி போட்டியானது 2 ஏப்ரல் 2011 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியின் முக்கிய தருனமானது 48வது ஓவரரை இலங்கை அணியின் பிரபலமான வீரரான குலசேகரா வீசிய 2வது பந்தை அப்போது பேட்டிங்கில் இருந்த இந்திய அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி அந்த பந்தை சிக்ஸர்க்கு அடித்து விரட்டினர். அந்த ஒரு நிமிடம் இந்தியாவில் உள்ள ரசிகர்களின் ஆனந்தம் எல்லையை மீறியது. சொல்லப்போனால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அந்த சிக்ஸரை கொண்டாடினார்கள்.
🚨BREAKING: Former Indian captain #MSDhoni felicitated at Wankhede Stadium!
— RevSportz (@RevSportz) April 7, 2023
2011 World Cup victory memorial will be built at the site where Dhoni's winning six had landed in Wankhede stadium.
5 chairs of @MumbaiCricAssoc pavilion stand will be removed for this pic.twitter.com/LJdSv9IuRO
அதன் மூலம் இந்திய அணி உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய வந்த மண்ணில் விளையாடி பெற்றது. அதற்கு பிறகு நடந்த பேட்டியில் இந்தியா வெற்றியடைந்ததற்கு காரணம் முழு அணியின் அபாரமான ஆட்டமும், இக்கட்டான நிலைமையில் கெளதம் கம்பிர் அடித்த அந்த 97 ரன்களும் தான் காரணம் என்று கூறினார். தோனி அப்படி கூறினாலும் அவர் கடைசியாக அடுத்த அந்த சிக்ஸர் தான் இன்று உலகக்கோப்பை என்றால் மனதிற்கு வரும்.
தோனியை பெருமை படுத்தும் வான்கடே :
இந்நிலையில் தான் 2011 உலக கோப்பையில் தோனி அடித்த அந்த சிக்ஸர் விழுந்த இடத்தில் தோனியின் பெயரை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.கிரிக்கெட் வரலாற்றில் ஒருவரின் சிக்ஸ்சரை நினைவு கூறும் வகையில் அமைத்தது இதுவே முதன்முறை ஆகும். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.இந்த செய்தியை அறிந்த சென்னை ரசிகர்கள் மிகுந்த இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்