நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை கதிகலங்க வைத்து அற்புதமான வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி.
உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர்.
உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். அந்த நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங் முதலில் செய்ய விரும்பியது.
அதன் படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு நிதானமான தொடக்கத்தை அளித்தனர்.இப்ராஹிம் சத்ரான் நிலைத்து நிற்க முடியாமல் 28 ரன்களில் அவுட் ஆகி வெளியேறு அதன் பின் வந்த ரஹ்மத் ஷா மூன்று ரன்கள் எடுத்த நிலை விக்கெட் இழந்து வெளியேறினார். மற்றொரு பக்கம் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் 57 பந்துகளை 80 ரன்கள் அடித்த நிலையில் அவரும் தனது விக்கெட்டை இழந்து திரும்பினார்.
அஸ்மத்துல்லா உமர்சாய், 14 ரன்கள் வெளியேற அதன் பின் அதன்பின் வந்த இக்ரம் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன் பின்வந்த ரஷித் கான் 23 ரன்களும் முஜீப் 28 ரன்களை அடித்திருந்தனர். ஆரம்பத்தில் கொஞ்சம் சொதப்பலாக விளையாடிக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் அணி அதன் பின் நிதானமாக விளையாடி 40.9 ஓவர்களில் 284 ரன்கள் மட்டுமே அடித்தது.
இங்கிலாந்து போன்ற பெரிய அணிக்கு இது ஒரு எளிதான இலக்கு என்று தான் நினைத்து இருந்த நிலையில் 285 என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் முதல் இருந்து தடங்கலாக விக்கெட்டுகளை இழந்து கொண்டு இருந்தனர். இரண்டாவது ஓவரிலேயே மூன்று ரன்கள் எடுத்த நிலையில் ஜானி பேர்ஸ்டோ, வெளியேறினார். அதன் பிறகு வந்த ஜோ ரூட்டும் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிக்காமல் ரசிகர்களை ஏமாற்றி 11 ரன்களில் வெளியேறினார். மற்றொரு பக்கம் டேவிட் மலான் ஆனால் அவராலும் ரன்களை சேர்க்க முடியாமல் 32 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அதன் பின்வந்த ஜாஸ் பட்லர் லிவிங்ஸ்டண் மற்றும் சாம் கரன் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு பக்கம் நின்று நிதானமாக விளையாடிக் கொண்டு இருந்த ஹாரி புரூக் 66 ரன்களில் அவரும் அவுட்டாகி வெளியேற அதன் பின்வந்த யாரும் நிலைத்து விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்த நிலையில் 40.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆனா இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வியை தழுவியது