வெளியானது உலகக்கோப்பை 2023 போட்டிகளுக்கான அட்டவணை. இந்தியாவின் முதல் போட்டி எங்கே தெரியுமா?
சர்வதேச கிரிக்கெட்டில் 13ஆவது உலகக்கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.இந்தியாவில் நடக்கும் இந்த உலகக்கோப்பை போட்டியில் நடப்பு சம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ப
சர்வதேச கிரிக்கெட்டில் 13ஆவது உலகக்கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.இந்தியாவில் நடக்கும் இந்த உலகக்கோப்பை போட்டியில் நடப்பு சம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுளை தேர்ந்த அணிகள் களமிறங்குகிறது. மேலும் இவர்களோடு உலகக்கோப்பை தகுதி சுற்றில் வெற்றி பெரும் இரண்டு அணிகள் கலந்து கொள்ள இருக்கிறது.
மற்ற உலகக்கோப்பை போட்டிகளையும் போல இந்த உலகக்கோப்பை போட்டியும் அணைத்து அணிகளுக்கு கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது, ஏனென்றால் இந்தியாவில் இந்த போட்டி நடத்தப்பட்டாலும் ஐபிஎல் போட்டியில் பல நாடுகளை சேரத்த வீரர்கள் விளையாடுவதினால், இங்குள்ள மைத்தனத்தின் நிலைமை குறித்தும் எப்படி இங்கு செயல்படவேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும், இதனால் இந்தியாவிற்கு இது ஒரு கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலகக்கோப்பை டெஸ்ட் போட்டியின் அட்டவணையும், எங்கே எப்போது நடக்கிறது என்பதும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஆக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை போட்டியானது நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது நரேந்திரி மோடி மைதானத்தில் இங்கிலாந்து vs நியூஸிலாந்திற்கு எதிராக நடக்க இருக்கிறது.
அதே போல இந்திய அணி வரும் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடக்கும் போட்டியானது சென்னை மைத்தனத்தில் நடைபெறுகிறது. இதற்கு சென்னை மைத்தானமும் தேவையான ஏற்படுகளை செய்து வருகிறது. ஆனால் அரையிறுதி போட்டிகள் சென்னையில் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அரையிறுதி போட்டியானது மும்பை மற்றும் கொல்கத்தா மாநிலத்திலும் இறுதி போட்டியானது நரேந்திர மோடி மைத்தனத்தில் நடைபெற இருக்கிறது.
GET YOUR CALENDARS READY! 🗓️🏆
— ICC Cricket World Cup (@cricketworldcup) June 27, 2023
The ICC Men's @cricketworldcup 2023 schedule is out now ⬇️#CWC23https://t.co/dakTklwcYe
இந்நிலையில் அட்டவணை வெளியாவதர்க்கு முன்னர் உலகக்கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் உலககோப்பையானது 1.2 லட்சம் அடி வானில் நிலைநிறுத்தப்பட்டு பின்னர் நரேந்திர மோடி மைத்தனத்தில் தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து பஹ்ரைன், மலேசியா, நைஜீரிய, இத்தாலி, பிரென்ஸ், குவைத், அமெரிக்க உள்பட 18 நாடுகளில் இருக்கும் 40 க்கும் அதிகமான நகரங்களுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இதனை தொடர்ந்து செப்டம்பர் 4ஆம் தேதி மீண்டும் கோப்பையானது இந்தியாவிற்கு திரும்புவது குறிப்பிடதக்கது.