தோனியை மிஞ்சி அற்புதமான கேட்ச் பிடித்த விர்த்திமான் சாகா – வீடியோ உள்ளே.
ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டி குஜராத் டைடன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியும், அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இந்த போட்டியானது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அணிக்கும் கடைசியில் உள்ள அணிக்கும் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பேட்டிங்
ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டி குஜராத் டைடன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியும், அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இந்த போட்டியானது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அணிக்கும் கடைசியில் உள்ள அணிக்கும் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் படி தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் சால்ட் களமிறங்கினார்கள்.
முதல் பந்திலே சால்ட் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின் அணியின் வார்னரும் 2 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து நிற்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வந்தனர். குஜராத் அணியின் பௌலிங்கை சமளிக்க முடியாமல் டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் திணறியே வந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.
ஷமியின் அற்புதமான பந்து வீச்சால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரூஸோ 8 ரன்களிலும்,மனிஷ் பண்டே 1 ரன்களிலும்,பிரியம் கார்க் 10 ரன்களில் வெளியேற அதன் பின் வந்த அக்சர் பட்டேல் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மற்றொரு புறம் நிதனமாக விளையாடி வந்த அமன் அதன் பின் தனது அதிரடியயை காட்டதொடங்கினரர். 44 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கானிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
— Aakash Chopra (@Aakash_Vani_1) May 2, 2023
ரிப்பல் பட்டேல் 23 ரன்னில் வெளியேறினார். இறுதியில் 20 வது ஓவர்கள் முடிவில் 8விக்கெட்டுகளை இழந்த நிலையில் 130 ரன்களை அடித்தனர் டெல்லி கேபிடல்ஸ் அணி. இந்நிலையில் போட்டியின் 4வது ஓவரின் போது ஷமி பந்துவீச வந்தார். அப்போது ஸ்டார்க்கில் இருந்த மனிஷ் பாண்டிய சிங்கிள் எடுக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து பேட்டின் ஓரத்தில் பட்டு விக்கெட் கீப்பரை நோக்கி சென்றது.
அப்போது விருத்திமான் சாஹா காற்றில் தாவி ஒரு அற்புதமான கேச்சை பிடித்தார். உண்மையில் அது சிறப்பான கேட்ச் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சொல்லப்போனால் சிறந்த சர்வதேச கேப்டன்களில் ஒருவரான ரிங்கி பாண்டிங் கூட அந்த கேட்சிற்கு ஆட்சட்டியபட்டார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய குஜராத் அணி இந்த செய்தியை எழுதும் வரையில் 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 59 ரன்களை எடுத்து திணறி வருகிறது.