நான் இவரோடு விளையாடுவது என்னுடைய பாக்கியம் – முதல் நாள் முடியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கொடுத்த பேட்டி.
மேற்கிந்திய தீவுகள் தீவுகளுக்கு இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சென்றிருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியானது சமீபத்தில் டொமேனிகாவில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹ
மேற்கிந்திய தீவுகள் தீவுகளுக்கு இந்திய அணியானது பல போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சென்றிருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியானது சமீபத்தில் டொமேனிகாவில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஜோடி இருவரும் சதம் அடித்தனர். இதனால் இந்திய அணியானது 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் அந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 171 ரன்களை விளாசினார். அதே போல நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா கூட்டணி 138 ரன்கள் சேர்த்தனர். ஆனால் ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இப்படி ஆட்டமிழந்தது அவருக்கே எமெட்ரமாக் இருந்த நிலையில் தான் அவர் குறித்து பேசியுள்ளார் ஜெய்ஸ்வால்.
ஜெய்ஸ்வால் கூறியது :
இந்நிலையில் இந்த நேற்று நடந்த முதல் நாள் ஆட்டத்தில் தான் ஆட்டமிழந்தது குறித்து பேசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் “கண்டிப்பாக எனக்கு அப்படி ஆட்டமிழந்தது வருத்தமாகத்தான் இருந்தது. இது கிரிக்கெட்டில் நடக்க கூடிய ஒரு விஷயம் தான். நான் மேலும் மேலும் பயிற்சி எடுத்து கற்றுக் கொண்டு அடுத்த முறை பேட்டிங் செய்ய வரும் போது சரியாக பேட்டிங் செய்ய வேண்டும்.
ஒவொரு முறையும் நான் அணிக்காக களமிறங்கும் போது என்னால் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியுமோ அந்த ளவிற்கு விளையாடுவதனை உறுதி செய்வதே என்னுடைய லட்சியமாகும். நான் ஆட்டமிழந்த போது வருத்தமாகத்தான் இருந்தது. இருந்த போதிலும் இதிலிருந்துஹ் கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டிற்காக விளையாடுவது, அந்த அழுத்தத்தை அனுபவிப்பது, மற்றும் விக்கெட்டை ரசிப்பது அனைத்துமே மகிழ்ச்சி தரக்கூடியது என்றார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
விராட் கோலி பற்றி பேசிய அவர் கூறுகையில் ” அவருடன் விளையாடுவது ஒரு அற்புதமான உணர்வு. நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றார் அவர் ஒரு லெஜெண்ட். அவருடன் விளையாடுவதற்கு நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். அவரிடம் இருந்து கிரிக்கெட் மற்றும் வெளியுலகை பற்றி கற்றுக்கொள்ள இன்னமும் பல விஷயங்கள் இருக்கிறது. நான் அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து கொள்ள விரும்புவதாக கூறினார்.
மேலும் எல்லோரும் ஒரு விஷியத்தை சொல்வது ஒவோருமாதிரியாக இருக்கும். எல்லாரிடமும் அனுபவம் இருக்கிறது. நன் அவர்கள் சொல்லு அனைத்து விஷியங்களையும் கேட்டுக்கொண்டு, எனக்கு எது பொருத்தமாக இருக்குமோ அதனை எடுத்துக்கொண்டு ஆட்டத்தை மேம்படுத்த முயற்சி செய்வேன். அவர் எனக்கு தரும் விளையாடும் அனுபவங்கள் நம்ம முடியாதவையாக இருக்கிறது என்றரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.