காலை 4.30 மணிக்கு போன் பண்ணி இத சொல்லி அழுக ஆரம்பிச்சுட்டான் – யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தந்தை உருக்கம்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி பிரபலமாகி இந்திய அணியில் பிடித்தாலும் அவருடைய தொடக்கம் என்பது மிகவும் சாதாரணமாகத்தான் இருந்தது. கிரிக்கெட்டை விரும்பும் ஒருவர் பயிற்சி எடுத்து கொண்டே தன்னுடைய செலவுக்காக பானி பூரி கடையில் வேலை பார்த்து பின்னர் படிப்படியாக முன்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி பிரபலமாகி இந்திய அணியில் பிடித்தாலும் அவருடைய தொடக்கம் என்பது மிகவும் சாதாரணமாகத்தான் இருந்தது. கிரிக்கெட்டை விரும்பும் ஒருவர் பயிற்சி எடுத்து கொண்டே தன்னுடைய செலவுக்காக பானி பூரி கடையில் வேலை பார்த்து பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது இந்த அளவுக்கு வளர்ந்து இந்திய அணியில் இளம் வீரராக களமிறங்கியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் தான் இவர் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார். இது ஒரு பெருமைக்குரிய விஷயம். இப்படிப்பட்ட நிலையில் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தந்தை பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஜெய்ஸ்வால் சதம் அடித்த பிறகு தனக்கு போன் செய்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில் “யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்த பிறகு (போட்டியின் இரண்டாவது நாள்) எனக்கு 4.30 மணிக்கு காலையில் (இந்திய நேரப்படி) போன் செய்தான். அவரால் தன்னுடைய கண்ணிரை அடக்க முடியவில்லை. நானும் அழுது விட்டேன். எந்த சமயம் அது எனக்கு மிகுந்த உணர்ச்சி தருணமாக இருந்தது. அவர் சிறிது நேரத்திற்கு பேசவே இல்லை. அவருக்கு மிகவும் சோர்வாக இருந்திருக்கும். பின்னர் சிறிது நேரம் கழித்து “அப்பா உங்களுக்கு மகிழ்ச்சியா?” என்று கேட்டார் என உணர்ச்சிவசப்பட்டு பேசினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
மேலும் இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய ஜெய்ஸ்வால்
என்னுடைய இந்த கிரிக்கெட் பயணத்திற்கு எனது பெற்றோர் பல தியாகங்களை செய்தார்கள் அவர்களுக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றி. மேலும் பலர் நான் இந்த இடத்திற்கு வர உதவியிருக்கின்றனர். அவர்களுக்கும் எனது நன்றிகள். மூத்த வீரர்களின் பேட்டிங் மிகவும் அற்புதமான ஒன்றாக இருந்தது. விராட் பாய் மற்றும் ரோஹித் பாயுடன் பேசி நான் அதிகம் கற்றுக்கொண்டேன். மேலும் அவர்களிடம் வரும் காலங்களில் அதிகம் கற்றுக்கொள் ஆவலாக இருக்கிறேன் என்றார் யஷ்சவி ஜெய்ஸ்வால்.
நான் என்னை போட்டிக்கும் தயார் படுத்தி கொள்வதிலும், ஒழுக்கத்தில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தியாவிற்காக அதுவும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது என்பது எனக்கு மிகவும் அற்புதமான மற்றும் உணர்ச்சி பூர்வமான ஓன்று. இது என்னுடைய தொடக்கம் தான். என்னுடைய கவனம் முழுவது தொடர்ந்து கிரிக்கெட்டில் முன்னேறிகொண்டே இருப்பது தான்.
டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொமினிகாவின் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டெஸ்டில் சிறப்பான இன்னிங்கை விளையாடினார்.
ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்த பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இணைந்து விளையாடினர்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் தொடக்க போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்டது, சதம் அடித்தது என பல சாதனைகளையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படித்துள்ளார். அதே போல வரும் காலங்களிலும் இவர் பல சாதனைகளை படிப்பார் என்று பலரும் கூறுகின்றனர்.