தனி ஒருவனாக மாஸ் காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 1000வது ஐபிஎல் போட்டியில் சதம் அடித்து சாதனை.

ஐபிஎல் 2023தொடரின் 42வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் சிறப்பான ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்து வந்தனர். அதோடு 1000 ஐபிஎல் போட்டியில் தொடக்கமே

By ·

ஐபிஎல் 2023தொடரின் 42வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் சிறப்பான ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்து வந்தனர். அதோடு 1000 ஐபிஎல் போட்டியில் தொடக்கமே ராஜஸ்தான் அணிக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார்.

அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாட 7 வது ஓவரின் போது சாவ்லா போட்ட முதல் பந்திலேயே பட்லர் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய எந்த பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை காட்டாவில்லை. இருந்த போதிலும் பொறுமையாகவும் அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடிய ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் அரை சதத்தை விளாசினார்

ஆனால் அதற்கு பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக ஜொலிக்காத நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே தனியாக ஆடிக்கொண்டிருந்தார் இந்நிலையில் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது ஐபிஎல் வாழ்க்கையின் முதல் சதத்தை வெறும் 53 பந்துகளில் வேகமாக அடித்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி சொல்லவேண்டும் என்ற அவர் சாதரண ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பகுதிநேர பானிபூரி கடையில் வேலை பாதி நேரம் ஆசாத் மையத்தில் கிரிக்கெட் பயிற்சி என இருந்த வந்த இவரை பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஒளிவிளக்காக இருந்த ஜ்வாலா சிங் ஜெய்ஸ்வாலின் திறமையை கண்டறிந்துள்ளார்.

அதற்கு பிறகு அண்டர் 19 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.40 கோடிக்கு 2020ல் வாங்கியது. 20 மற்றும் 21ஆம் ஆண்டுகளில் ஜொலிக்காவிட்டாலும் தற்போது நடந்துவரும் ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் முதல் ஐபிஎல் சதத்தை அடித்திருக்கிறார். இப்படி பானிபூரி விற்ற சிறுவன் கூட முயற்சி செய்தால் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை இளைனர்கள் மத்தியில் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார் ஜெய்ஸ்வால்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை