வீடியோ : அல்வாபோல வந்த வாய்ப்பை தரவிட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் – அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா?
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் க
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இரண்டாவது போட்டியானது இன்று பிராவிடன்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் 3வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழந்து 159 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் பிரண்டன் கிங் 42 ரன்களையும், ராவ்மன் பவல் 40 ரன்கள் குவித்தனர்.
இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கடந்த 2 போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்மஸ்ன் இஷான் கிஷான் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இஷான் கிஷான் இந்த போட்டியில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஐபிஎல் போட்டியில் கலக்கிய யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணமாக இருந்த்து.
ஏனென்றால் தனக்கு கிடைத்த முதல் சர்வதேச போட்டியானது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அற்புதமான விளையாடிய யஷஸ்வி சதம் அடித்தார். அதே போல தற்போது கிடைத்துள்ள டி20 வாய்ப்பையும் பயன்படுத்தி கொண்டு சதம் அடிப்பார் என்று எதிர்பார்கப்பட்டது. இதில் தவறு ஒன்றும் கிடையாது, ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் 13 அப்பந்துகளில் அரை சதம் அடித்த முதல் வீரர் ஜெய்ஸ்வால் தான். இதனால் தன்னுடைய முதல் போட்டியிலேயே பறக்க விடுவார் என்று எதிர்பார்கப்பட்டது.
Yashasvi Jaiswal caught for 1 from 2 balls on his T20I debut for India 😬#WIvIND pic.twitter.com/6TRNzcYZ5Y
— Cricket on TNT Sports (@cricketontnt) August 8, 2023
ஆனால் சுப்மன் கில்லுடன் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்து ஆடிய நிலையில் இரண்டாவது பந்தை ஓங்கி அடிக்க அது நேராக மேலே எகிறியது. அந்த பந்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்தார். இதனால் சோகத்துடன் ஜெய்ஸ்வால் பெவிலியன் திரும்பினார். மேலும் தற்போது இந்திய அணியில் அதிகமான பேட்ஸ்மேன்கள் இருப்பதினால் தனக்கு கிடைத்த வாய்ப்பை தரவிட்டதினால் மீண்டும் வாய்ப்பு கிடைக்காமல் கூட போகலாம்.
ஆனால் ஜெய்ஸ்வாலுக்கு இது முதல் போட்டி என்பதினால், இவருக்கு திறமை இருக்கிறது என்பதினால் மீண்டும் தேர்வாக அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இந்த செய்தியை எழுதும் வரையில் இந்திய அணியானது 15.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்களை அடித்துள்ளது.