விராட் மற்றும் ரோஹித் பாயிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் – யஹஷ்வி ஜெய்ஸ்வால் உருக்கம்.
டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொமினிகாவின
டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொமினிகாவின் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டெஸ்டின் 2 ஆம் நாளில் ஜெய்ஸ்வால் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் 229 ரன் என்ற நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்த பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இணைந்து விளையாடினர்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்தியா 421 ரன்களில் டக்ளர் கொடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது இன்னிங்கில் 130 ரன்களுக்கு சுருண்டது.
இந்த போட்டியில் அதிக ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருது வழக்கப்பட்டது. மேலும் இதற்கு பிறகு பேசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தன்னுடைய பேட்டிங் குறித்தும், சக வீரர்கள் குறித்தும் பேசினார். அவர் கூறியது பின்வருமாறு”
யஷஸ்வி ஜெய்ஸ்வால் கொடுத்த பேட்டி :
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக என்னை நான் தயார் படுத்தி கொண்டேன். எங்களுக்கு நாள் செஷனாக இது இருந்தது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பேசினோம். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அணைத்து தேர்வாளர்களுக்கும், என் மீது நம்பிக்கை வைத்த ரோஹித் பாய்க்கும் நான் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். இது மிகவும் அருமையான உணர்வு. இதற்காக நான் அதிகமாக உழைத்திருக்கிறேன்.
நான் என்னை போட்டிக்கும் தயார் படுத்தி கொள்வதிலும், ஒழுக்கத்தில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தியாவிற்காக அதுவும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது என்பது எனக்கு மிகவும் அற்புதமான மற்றும் உணர்ச்சி பூர்வமான ஓன்று. இது என்னுடைய தொடக்கம் தான். என்னுடைய கவனம் முழுவது தொடர்ந்து கிரிக்கெட்டில் முன்னேறிகொண்டே இருப்பது தான்.
என்னுடைய இந்த கிரிக்கெட் பயணத்திற்கு நான் பலர் உதவி செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். மூத்த வீரர்களின் பேட்டிங் மிகவும் அற்புதமான ஒன்றாக இருந்தது. விராட் பாய் மற்றும் ரோஹித் பாயுடன் பேசி நான் அதிகம் கற்றுக்கொண்டேன். மேலும் அவர்களிடம் வரும் காலங்களில் அதிகம் கற்றுக்கொள் ஆவலாக இருக்கிறேன் என்றார் யஷ்சவி ஜெய்ஸ்வால்.