யஷஸ்வி ஜெய்ஸ்வால் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாட தகுதியானவர் – இந்திய அணியின் முன்னாள் வீரர் அதிரடி.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 போட்டியானது கோலாகலமாக நடந்த முடிந்தது. இதில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. குறிப்பாக சென்னை அணி அணி கடைசி பந்து வரையில் சென்று வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 5 தொடர் சிக்ஸர்கள் அடித்து. கடைசி ஓவரில் நோ பால் ஆட்டத்தை மாற்றியது, அதிவேகமாக அர

By ·

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 போட்டியானது கோலாகலமாக நடந்த முடிந்தது. இதில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது. குறிப்பாக சென்னை அணி அணி கடைசி பந்து வரையில் சென்று வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 5 தொடர் சிக்ஸர்கள் அடித்து. கடைசி ஓவரில் நோ பால் ஆட்டத்தை மாற்றியது, அதிவேகமாக அரை சதம் அடித்து என பல நம்பமுடியாத சம்பவங்கள் நடந்தது. இதன் மூலம் பல இளம் வீரர்களும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினார்கள்.

குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவரது பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்த காரணத்தினால் கங்குலி, கவாஸ்கர் போன்ற பல முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டுகளை தெரிவித்து இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு விளங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்படிப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.

கவுதம் கம்பிர் கூறியது :

அவர் கூறுகையில் “யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல்லில் மட்டும் சிறப்பாக செயல்படவில்லை, அவர் இந்தியாவில் நடைபெற்ற உள்நாட்டு கிரிக்கெட்டில் போட்டியில் 200 ரன்களை அடித்துள்ளார் அதோடு அவர் முச்சதமும் அடித்துள்ளார். அவர் விஜய் ஹசாரே கோப்பையிலும் 200 ரன்கள் எடுத்துள்ளார். அதனை பார்க்கும் போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் போட்டிகளில் செய்தது கேக்கில் உள்ள ஐசிங் மட்டும் தான். இப்படிப்பட்ட திறமையான ஒருவர் கண்டிப்பாக கிரிக்கெட்டின் மூன்று பார்மெட்டுகளிலும் விளையாட வேண்டும் என்று கூறினார் கவுதம் காம்பிர்.

சமீபத்தில் முடிவடைந்த இந்தியன் பிரீமியர் லீக்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடியான விளையாடினால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். மேலும் இவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதினால் பந்துவீச்சாரகளுக்கு கண்டிப்பாக சவாலான ஒரு ஆளாக இருப்பர் என்பதில் சந்தேகமே கிடையாது. ஏனென்றால் இந்த ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்களை விளாசினார். இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் புதிய பேட்ஸ்மேனாக எடுப்பது கடினம்.

மேலும் 48.08 ராசரியாகவும் 163.61 ஸ்ட்ரைக் ரேட்டிலும் விளையாடுகிறார். மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் நம்பமுடியாத ஃபார்மில் உள்ளார். ரஞ்சி டிராபி 2022-23 சீசனில் 45 சராசரியுடன் 315 ரன்கள் எடுத்தார். அவர் 15 முதல் தர ஆட்டங்களில் 1845 ரன்கள் எடுத்தார், சராசரி 80.21. அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 13 பந்துகளில் அரை சதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் படித்தார் என்பது குறிப்பிடதக்கது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி சொல்லவேண்டும் என்ற அவர் சாதரண ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பகுதிநேர பானிபூரி கடையில் வேலை பாதி நேரம் ஆசாத் மையத்தில் கிரிக்கெட் பயிற்சி என இருந்த வந்த இவரை பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஒளிவிளக்காக இருந்த ஜ்வாலா சிங் ஜெய்ஸ்வாலின் திறமையை கண்டறிந்துள்ளார். அதற்கு பிறகு அண்டர் 19 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.40 கோடிக்கு 2020ல் வாங்கியது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஜொலிக்காவிட்டாலும் தற்போது நடந்துவரும் ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் முதல் ஐபிஎல் சதத்தை அடித்திருக்கிறார். இப்படி பானிபூரி விற்ற சிறுவன் கூட முயற்சி செய்தால் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை இளைனர்கள் மத்தியில் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார் ஜெய்ஸ்வால்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை