ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

ஐபிஎல் 2023 லீக் போட்டிகளில் 56 போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. .டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 வது ஓவர்கள் முட

By ·

ஐபிஎல் 2023 லீக் போட்டிகளில் 56 போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. .டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து நிலையில் 149 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

இந்நிலையில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. அதன் படி தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்டார் களமிறங்கினர். இந்நிலையில் ஜோஸ் பட்டாளர் 2 வது ஓவரில் ஆட்டமிழந்தாலும் ஜெய்ஸ்வால் ருத்ர தாண்டவம் ஆடினார்.

அதிரடியாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 50 ரன்களை விளாசினார். இதன் முலம் அதிக ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படித்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றிய தகவல் :

யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி சொல்லவேண்டும் என்ற அவர் சாதரண ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பகுதிநேர பானிபூரி கடையில் வேலை பாதி நேரம் ஆசாத் மையத்தில் கிரிக்கெட் பயிற்சி என இருந்த வந்த இவரை பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஒளிவிளக்காக இருந்த ஜ்வாலா சிங் ஜெய்ஸ்வாலின் திறமையை கண்டறிந்துள்ளார். அதற்கு பிறகு அண்டர் 19 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.40 கோடிக்கு 2020ல் வாங்கியது.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஜொலிக்காவிட்டாலும் தற்போது நடந்துவரும் ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் முதல் ஐபிஎல் சதத்தை அடித்திருக்கிறார். இப்படி பானிபூரி விற்ற சிறுவன் கூட முயற்சி செய்தால் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை இளைனர்கள் மத்தியில் ஒரு முன்மாதிரியாக இருந்து வருகிறார் ஜெய்ஸ்வால்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை