இவர்களின் பேச்சு எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது – ஆட்டநாயகன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேச்சு.

இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்ந

By ·

இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் 3 வது போட்டியில் தொடக்க வீரர்கள் தடுமாறிய நிலையில் திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவதும் இணைத்து சிறப்பாக விளையாடினார்கள்.

இந்நிலையில் ப்ளோரிடாவில் இன்று நடந்து முக்கியமான 4வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஏனெனென்றல் ஆடுகளமானது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 178/8 ரன்களை விளாசியது. இதனையடுத்து 179 என்ற இலக்கை துரத்த களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த போட்டியில் வெற்றியடைந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அந்த அழுத்திலும் தொடக்க வீரர்களுக்காக கமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்தனர்.

கடந்த அறிமுகப்போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் இம்முறை பந்துகளை அணைத்து புறமும் பறக்க விட்டார். மறுபுறம் கடந்த போட்டியில் சொதப்பிய சுப்மன் கில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக விளையாடினார். இந்த இளம் தொடக்க வீரர்கள் ஜோடி சேர்ந்து 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடப்பிடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.

மேலும் இந்த போட்டியில் அடித்த அரை சதம் மூலம் அடுத்த போட்டிக்கும் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டும் என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் வரும் 2024 உலக கோப்பையிலும் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. மேலும் 84(51) ரன்களை விளாசிய ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதனையடுத்து பேசிய அவர் கூறுகையில் “சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிவது என்பது கண்டிப்பாக எளிதான விஷயம் கிடையாது. அங்கு சென்று என்னை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு ஆதரவு அணியின் வீரர்களுக்கும் ஹர்திக் பாய்க்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் அவர்கள் கொடுத்த நம்பிக்கை என்னுடைய மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அணிக்கு எப்படித் தேவை, எப்படித் என்னுடைய திட்டங்களை வெளிப்படுத்துவது என்பது குறித்து சரியாக விளையாட முயற்சிக்கிறேன்.

நான் விரைவாக ஸ்கோர் செய்ய விருப்பப்பட்டேன். குறிப்பாக பவர்பிளேயில் எத்தனை ஷாட்களை என்னால் விளையாட முடியும்? விக்கெட்டைப் எப்படி படிப்பது? சூழ்நிலையை எப்படி கையாளுவது? ஆட்டத்தை எப்படி ஆழமாக எடுத்துச் செல்வது என்பதை பற்றியெல்லாம் தான் நினைத்து வருகிறேன். எப்போதும் ரன் குவிப்பதே எனது நோக்கம்.(ஐபிஎல்லில் ஹோல்டர் மற்றும் மெக்காய் போன்ற வீரர்களுக்கு எதிராக நிறைய பந்துகளை விளையாடியுள்ளேன். அது எனக்கு இங்கே உதவியது என்றார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை