தோனி, விராட் போன்றவர்களோடு பேசுவது நம்பிக்கை கொடுக்கிறது – அதிரடியாக ஆடிய ஜெயஸ்வால் ஆட்டநாயகன் விருதிற்கு பிறகு கூறியது.
ஐபிஎல் 2023ல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது நேற்று சாவை மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய செய்தது. சஞ்சுவின் முடிவை சரியென நிரூபித்த அந்த அணி, யஷஸ்வியின் அபாரம
ஐபிஎல் 2023ல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது நேற்று சாவை மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய செய்தது. சஞ்சுவின் முடிவை சரியென நிரூபித்த அந்த அணி, யஷஸ்வியின் அபாரமான பேட்டிங்கால் அரைசதத்தால் 202 ரன்களை எடுக்க முடிந்தது.
இந்த இலக்கை துரத்திய சென்னை அணி சிறப்பான தொடக்கம் பெற்றதுடன், ருதுராஜின் அதிரடியான பேட்டிங்கால் சென்னை அணியின் ரன்ரேட்டும் சிறப்பாக உயர்ந்து வந்தது.ஆனால் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ தொடங்கியதும், போட்டி அணியின் கையை விட்டு நழுவி சென்றது. இறுதியில் சிவம் துபே அபாரமாக ஆடி அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற முயற்ச்சி. இருப்பினும் இறுதியில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெற்றிக்குப் பிறகு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருதைப்பெற்றார். இந்த சீசனில் ராஜஸ்தானுக்கு யஷஸ்வி சிறப்பான ஆட்டத்தையே தொடர்ந்து வந்தார். அதே பாணியை இந்த போட்டியிலும் மேற்கொண்டார். அணிக்காக அதிக ரன் குவித்தவர் என்ற வீரர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவரின் அற்புதமான ஆட்டத்தின் காரணமாக ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளது.
WHAT. A. SHOT! ⚡️ ⚡️@ybj_19 is on a rampage 🔥
— IndianPremierLeague (@IPL) April 27, 2023
Some glorious hitting tonight 👌
Follow the match ▶️ https://t.co/LoIryJ4ePJ#TATAIPL | #RRvCSK | @rajasthanroyals pic.twitter.com/c3FZ5bOkZm
இந்த நிலையில் ஆட்ட நாயகன் விருதை பெற்றுக் கொள்ளும் போது தனது பேட்டிங் குறித்து சில வார்த்தைகள் பேசினார். அவர் கூறியதாவது “இன்று நான் போட்டியை மகிழ்ந்து விளையாடினேன். நான் பந்தை வேகமாக அடிக்க முயற்சி செய்தேன் காற்று எந்த பக்கம் வீசுகிறது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் நான் ஆட்டத்தில் நல்ல கிரிக்கெட் ஷாட்களை விளையாட வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.
Yashasvi Jaiswal said – "I keep speaking to senior players like MS Dhoni sir and Virat Kohli bhaiya. I learned a lot from them". pic.twitter.com/ylepX3LpKK
— CricketMAN2 (@ImTanujSingh) April 27, 2023
இது இந்த சீசனைப் மட்டும் பற்றியது அல்ல நான் அணி நிர்வாகத்துடனும் தோனி சார் மற்றும் விராட் போன்ற மூத்த வீரர்களிடம் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறேன். நான் ஒரு சில சமயத்தில் அழுத்தத்தை அனுபவிக்கிறேன் மற்றும் அழுத்தில் இருக்கும் போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என தெளிவாக இருக்க விரும்புகிறேன். குறிப்பாக எனது ஸ்டிரைக் ரேட்டை உயர்வாக வைத்திருக்க வேண்டும் என்று மட்டுமே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த மைதானத்தில் 200 ரன்கள் தேவை என்று எனக்குத் தெரியும். போட்டிக்கு பின்னர் ஜெயஸ்வால் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.