நீங்க இதை செஞ்ச மட்டும் தான் அவரின் விக்கெட்டை வீழ்த்த முடியும் – ஜாகிர் கான் கருத்து
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் தற்போது இந்திய அணி முதலாவது கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடி வந்தது. அதில் முதல் போட்டி சில நாட்களுக்கு முன் மழையின் காரணமாக ரத்
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் தற்போது இந்திய அணி முதலாவது கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடி வந்தது. அதில் முதல் போட்டி சில நாட்களுக்கு முன் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்னும் மிஞ்சி இருக்கும் இரண்டுவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் இந்திய அணி வென்று தொடரை சமன் செய்தது.
ஆரம்பம் அதிரடியாக இருந்தாலும் கில் 12 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் திலக் வர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் கேப்டன் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 2௦ ஓவர்கள் முடிவில் 200 ரன்களை குவித்திருந்தது. இந்தியா அணியின் அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 ரன்களும் ஜெய்ஸ்வால் 60 ரன்களும் ரின்கு சிங் 14 ரன்களையும் குவித்து இருந்தனர் . எனவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. தென்னாபிரிக்கா அணி சார்பில் வில்லியம்ஸ் மற்றும் மகாராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஷம்சி மற்றும் பர்கர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
தென்னாபிரிக்கா அணி ஆரம்பத்தில் இருந்து தடுமாறி வந்த நிலையில் 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்னில் ஆட்டமிழந்தது. தென்னாபிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக மில்லர் 35 ரன்களும் மார்க்கரம் 25 ரன்களும் டோனோவன் ஃபெரேரா 12 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். இறுதியில் இந்திய அணி சூர்யகுமார் யாதவ் அடித்த தனிப்பட்ட ரன்னை கூட எட்டமுடியாமல் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் 100 ரன்களை குவித்து ஒரு சாதனையை படைத்தது இருந்தார். இதில் 7 பவுண்டரிகளும் 8 சிக்சர்களையும் அடித்து இருந்தார். சூர்யாகுமாரின் அதிரடி ஆட்டம் குறித்து முன்னால் இந்திய வீரர் ஜாகீர் கான் கூறுகையில்,
சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் தனக்கென்று ஒரு பெயரை பதித்து விட்டார் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அவர் மைதானத்தில் விளையாடும் போது அனைத்து வகையான ஷாட்க்களையும் அவர்கள் வைத்துள்ளார். அதுதான் அவருக்கு எதிராக பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவதற்கு கடினமாக இருக்கின்றது. நீங்கள் ஆடுகளத்தின் ஒரு பக்கத்தை அடிக்க முடிந்தால், ஒரு பந்துவீச்சாளராக உங்களுக்கு எப்போதும் களக் கட்டுப்பாடுகளுடன் இந்த வடிவத்தில் வாய்ப்பு கிடைக்கும், ஆனால், சூர்யாவைப் போன்ற ஒரு பேட்டர் உங்களிடம் இருந்தால், அவர் பந்தை லாங் ஆன், மிட்விக்கெட்டில் அடிக்க முடியும்.
கவர்களுக்கு மேல் சிக்ஸர் அடிக்க முடியும், பேட்டின்நன்றாகத் திறந்து வேகத்தைப் பயன்படுத்துகிறார், அது பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும். அவர் எந்த பீல்டரை அடிக்க வேண்டும் என்று ஃபீல்டர்களைத் தேர்வு செய்கிறார், அவரது இடங்களைத் தேர்வு செய்கிறார். அந்த வகையான இடத்தில் இருந்தால், பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவது ஒருபோதும் எளிதாக இருக்காது, பந்துகளை பந்துவீசி அவரை வெளியேற்றுவதற்கான சிறந்த வாய்ப்பை நீங்களே வழங்கப் போகிறீர்கள், அதுவே அவரைத் தடுப்பதற்கான ஒரு வழியாகும். அதுதான் இறுதியில் நடந்தது,” என்று ஜாஹீர் மேலும் கூறினார்.