ராயுடு அணியில் இருந்தால் “பேர் ப்ளே விருது” கிடைக்காது – இப்படி தோனி கூற காரணம் என்ன?

ஐபிஎல் 2023 தொடரின் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. மழை குறுக்கிட்டாதான் காரணமாக பல மணி நேரமாக, கிட்டத்தட்ட 1 நாளே தள்ளி போனது. இதனால் 29 போட்டி நடந்த நிலையில் குஜராத் அணி 214 ரன்களை அடித்தது. ஆனால் மழையின் காரணமாக DLC முறை படி 15 ஓவர்களில் 171 ரன்கள் என குற

By ·

ஐபிஎல் 2023 தொடரின் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. மழை குறுக்கிட்டாதான் காரணமாக பல மணி நேரமாக, கிட்டத்தட்ட 1 நாளே தள்ளி போனது. இதனால் 29 போட்டி நடந்த நிலையில் குஜராத் அணி 214 ரன்களை அடித்தது. ஆனால் மழையின் காரணமாக DLC முறை படி 15 ஓவர்களில் 171 ரன்கள் என குறைக்கப்பட்டது. இதன் படி களமிறங்கிய சென்னை அணி வீரர்களின் கூட்டு முயற்சியாலும், ஜடேஜாவின் அற்புதமான பேட்டிங்கினாலும் பைனலில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி தடுமாறி கொண்டிருந்த முக்கிய நேரத்தில் களமிறங்கி 8 பந்துகளில் 19 ரன்களை விளாசினார். அது சென்னை அணி வெற்றியடைய மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது. இந்நிலையில் அந்த போட்டிக்கு பிறகு பேசிய தோனி “அம்பத்தி ராயுடுவிடம் சிறப்பான விஷயம் என்றாலே அவர் மைத்தனத்தில் இருக்கும் போது தன்னால் முடிந்த அளவிற்கு 100 சதவிகித்தையும் கொடுப்பார்.

ஆனால் அவர் அணியில் இருந்தால் எங்களினால் ஒருபோதும் பேர் பிளே விருதை பெற முடியாது என்று தோனி ராயுடுவை கலைத்தார். தோனி இப்படி கூறியதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது ராயுடு ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல் சர்வதேச போட்டிங்களிலும் சண்டை, விமர்சனம் போன்றவற்றில் ஆக்கிரோஷமாக செயல்படுவர். அவரின் எதிரே அந்த பெரிய வீரராக இருந்தாலும் சரி அவருடன் பயம் இல்லாமல் விவாதம் செய்வார்.

இதனால் வருடா வருடம் ஐபிஎல் போட்டிகளில் விவாதங்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாத அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் “பேர் பிளே” என்ற விருதை வழங்குகிறது. இந்த ஐபிஎல் சீசனில் இந்த விருது விவாதங்களில் ஈடுபடாமல் இருந்த டெல்லி அணிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

அம்பாதி ராயுடு ஐபிஎல் போட்டிகளில் 3 முறை மும்பை அணியிலும் 3 முறை சென்னை அணியிலும் கோப்பை வெல்லும் போது இருந்திருக்கிறார். ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் இறுதி போட்டியோடு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகவும், இந்திய கிரிக்கெட்டின் அணைத்து வகையான போட்டிகளில் இருந்தும் விலகுவதாக தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில் அவனுடைய கிரிக்கெட் பயணத்திற்கு அனைவரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை