வேறு எந்த கேப்டனும் உலக கோப்பையை வெல்ல கூடாது என்று தோனி நினைத்தார் – யுவராஜ் சிங் தந்தை குற்றசாட்டு.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி. மேலும் இந்திய கேப்டன்களில் மூன்று உலக கோப்பைக

By ·

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது தோனி தான். பட்டிதொட்டி எங்கும் இவர் பிரபலம். இவர் கிரிக்கெட் உலகில் செய்த சாதனைகளை விரல் விட்டு சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்தவர் தோனி. மேலும் இந்திய கேப்டன்களில் மூன்று உலக கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்றால் அது எம்.எஸ் தோனி தான். இந்நிலையில் தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.

இருந்த போதிலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணைக்க தொடர்ந்து விளையாடிவரும் தோனி அடுத்த ஆண்டும் விளையாட போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் தோனி கிரிக்கெட்டில் விளையாடி கொண்டிருக்கும் போதே கேப்டன் பதவியில் இருந்து விலகி விராட் கோலிக்கு வழி விட்டார். மேலும் விராட் கோலியும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி 2019 உலக கோப்பையின் 1 செமி பைனல் வரையில் கொண்டு வந்தார். ஆனால் துரதிஷ்ட வசமாக இந்தியா அந்த உலக கோப்பையில் தோல்வியை தழுவியது.

வைரல் வீடியோ :

இந்நிலையில் உலக கோப்பை 2023 நெருங்கும் நேரத்தில் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் தோனி பற்றி விமர்சித்து பேசிய பழைய வீடியோ ஓன்று சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யுவராஜ் சிங் தந்தை கூறியதாவது “என்னுடைய ரத்தம் கொதிக்கிறது. தோனி அந்த போட்டியில் இந்தியா தோல்வியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பேட்டிங் செய்தார்.

தன்னை தவிர வேறு எந்த கேப்டனும் உலக கோப்பையை வெல்ல கூடாது என்று தோனி நினைத்தார். அதே நேரத்தில் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக விளையாடி கொண்டு இறுதி வரையில் இந்திய வெற்றியடைய போராடினார். ஆனால் தோனி அவருடைய முழு திறமையுடன் விளையாடவில்லை. அவர் தன்னுடைய 40 சதவிகிதத்தை கொடுத்திருந்தால் இந்தியா அந்த போட்டியில் 48வது ஓவரிலேயே வென்றிருக்கும் என்றார் யுவராஜ் தந்தை. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பெரும் வைரலாகி வருகிறது.

2019 உலக கோப்பை :

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி செமிபைனல் 1 வரையில் வந்து நியூஸிலாந்துடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

ஏனென்றால் விராட், ரோஹித், ராகுல் மூவருமே வெறும் 1 ரன்னில் அவுட்டானார்கள். ஆனால் பொறுமையாக விளையாடிய ஜடேஜா 77 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் ஜடேஜாவுடன் கைகோர்த்த தோனியும் பொருமியாக விளையாட கடைசி 7 பந்தில் இந்தியா வெற்றி பெற 2 ரன்கள் தேவை பட்டது. ஆனால் தோனி 49.6 வது ஒவரில் ரன் அவுட்டானார். அந்த நிமிடம் இந்தியாவே ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டது. இதனையடுத்து பேட்ஸ்மேன் யாரும் இல்லாத நிலையில் இந்தியா 49.3 ஓவர்களில் ஆல் அவுட்டானது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை