கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை விட்டு ஓடிவிடலாம் என்று நினைத்தேன் – யுவராஜ் சிங் அதிர்ச்சி தகவல்.

ஐபிஎல் போட்டியானது கந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவிற்காக புதிய வீரர்கள்களை தேடும் பொருட்டு உருவாக்கப்பட்டாலும் அதற்கு ஐபிஎல் போட்டியானது இந்திய அணியில் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தியது. குறிப்பாக பல வீரர்களின் அடையாளம் ஒரு சில அணிகளுக்கு மட்டுமே சொந்தமானது போல ஆனது. உதாரணமாக மும்பை இந

By ·

ஐபிஎல் போட்டியானது கந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவிற்காக புதிய வீரர்கள்களை தேடும் பொருட்டு உருவாக்கப்பட்டாலும் அதற்கு ஐபிஎல் போட்டியானது இந்திய அணியில் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தியது. குறிப்பாக பல வீரர்களின் அடையாளம் ஒரு சில அணிகளுக்கு மட்டுமே சொந்தமானது போல ஆனது. உதாரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் ஷர்மா, ஆர்சிபி அணிக்கு விராட் கோலி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி என்று கூறலாம்.

ஆனால் சமீப காலங்களில் ஒரு ஐபிஎல் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர் கூறும் தகவல்கள் அதிர்ச்சி கொடுக்கும் படியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக டேவிட் வார்னர். சமீபத்தில் யுஸ்வேந்திர சாஹல், பார்திவ் படேல் போன்றவர்கள் கூறியது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்த நிலையில் ஒரு காலத்தில் இந்தியாவின் மிக முக்கியமான வீரராக இருந்த யுவராஜ் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்தது குறித்து பேசியுள்ளது பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் யுவராஜ் சிங் மிகவும் சிறப்பான வீரராக இருந்தார். இதனால் அடித்து இந்திய அணிக்கு கேப்டனாக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்த போதிலும் பஞ்சாப் அவருக்கு பஞ்சாப் அணியில் கேப்டனா வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணியில் இருந்தது மிகவும் மோசமான அனுபவம் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

அதவது ஜடந்த 2008ஆம் ஆண்டு பஞ்சாப் அணியை வழிநடத்தும் முதல் கேப்டனாக யுவராஜ் சிங் பொறுப்பேற்றார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியானது அரையிறுதி போட்டிக்கு சென்றது. ஆனால் அந்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியானது பஞ்சாப் அணியை வீழ்த்தியது. அதற்கு பிறகு 2009 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டி முடிந்த பிறகே தனக்கு அணியின் நிர்வாகம் பற்றி வெளிப்படையான தகவல் தெரிந்தததாக கூறினார்.

அவர் கூறியதாவது “நான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து ஓடிவிடலாம் என்று நினைத்தேன். அணியின் நிர்வாகத்தில் இருந்தவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்று எனக்கு பின்னர் தான் தெரியவந்தது. நான் கேப்டனாக இருந்த போது கேட்ட எந்த விஷியத்தையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எனக்கு செய்து தரவில்லை. நான் கேட்ட வீரர்களை கூட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எனக்கு ஏலத்தில் எடுத்து தரவில்லை. ஆனால் நான் பஞ்சாப் அணியில் இருந்து விலகிய பிறகு நான் சொன்ன அனைத்து வீரர்களையும் ஏலத்தில் வாங்கினார்கள்.

எனக்கு பஞ்சாப் அணியை மிகவும் பிடிக்கும் ஆனால் அந்த அணியின் நிர்வாகத்தை சுத்தமாக பிடிக்காது என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு யுவராஜ் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடைசியாக விளையாடினார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் சமீபத்தில் வெளியான தகவலின் படி வெளிநாட்டு லீக் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை