வேணா பாருங்க அவர் உலக கோப்பையில் செய்ய போவதை – இந்திய வீரருக்கு ஆதரவாக பேசிய யுவராஜ் சிங்.
சர்வதேச கிரிக்கெட்டில் 13ஆவது உலகக்கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.இந்தியாவில் நடக்கும் இந்த உலகக்கோப்பை போட்டியில் நடப்பு சம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ப
சர்வதேச கிரிக்கெட்டில் 13ஆவது உலகக்கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.இந்தியாவில் நடக்கும் இந்த உலகக்கோப்பை போட்டியில் நடப்பு சம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, ஐயர்லாந்து உள்ளிட்ட நாடுளை தேர்ந்த அணிகள் களமிறங்குகிறது.
மற்ற உலகக்கோப்பை போட்டிகளையும் போல இந்த உலகக்கோப்பை போட்டியும் அணைத்து அணிகளுக்கு கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது, ஏனென்றால் இந்தியாவில் இந்த போட்டி நடத்தப்பட்டாலும் ஐபிஎல் போட்டியில் பல நாடுகளை சேரத்த வீரர்கள் விளையாடுவதினால், இங்குள்ள மைத்தனத்தின் நிலைமை குறித்தும் எப்படி இங்கு செயல்படவேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும், இதனால் இந்தியாவிற்கு இது ஒரு கடுமையான போட்டியாக இருக்கும்.
மேலும் பும்ரா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் குறிப்பாக இடது கை பேட்டர் ஸ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்கள் காயம் காரணமாக தற்போது இந்திய அணியில் இல்லாத நிலையில் அவர்களுக்கு பதிலாக சில வீரர்களையும் தயார் செய்து வருகிறது இந்தியா. ஒரு வேளை மூத்த வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் இந்தியா புதிய இளம் வீரர்களை வைத்து விளையாடும். ஆனால் இந்தியாவிற்கு மேலும் ஒரு பிரச்னை அணியில் இருக்கிறது.
அதாவது கடந்த 2011 உலக கோப்பையின் போது இந்தியா சிறப்பான விளையாட்டை விளையாடியது, அதற்கு காரணம் தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்தாலும் கோடா பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், கம்பீர் போன்றவர்கள் தூணாக நின்று இந்தியாவை கரை சேர்த்தனர். அதே போலத்தான் இப்போதும் தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் கடந்த சில போட்டிகளில் பெரிதாக ரன்களை எடுக்க முடியவில்லை.
மேலும் ரோஹித் ஷர்மாவின் பார்ம் ஐபிஎல் போட்டியில் மோசமாக இருந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியிலும் அப்படிதான் விளையாடினார். இந்த நிலையில் தான் யுவராஜ் சிங் ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் ” ரோஹித் சர்மா தற்போது நல்ல ஃபார்மில் இல்லை என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இருப்பினும் கடந்த முறையும் 2019 உலக கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் அவர் நல்ல ஃபார்மில் இல்லை ஆனாலும் உலகக்கோப்பையில் அவரிடம் இருந்து ஏதோ ஸ்பெஷல் வரப்போகிறது என்று நான் சொன்னேன்.
அதே போலவே அந்த தொடரில் அவர் 4 – 5 சதங்கள் அடித்தார். எனவே இம்முறை நல்ல ஃபார்மில் இல்லையென்றாலும் உலக கோப்பையில் அவர் பெரிய அளவில் அபாரமாக செயல்படுவார் என்பது உங்களுக்கு தெரியாது. அனைத்தும் இங்கே ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்கிறது. இதுவே எனக்கும் 2011 உலக கோப்பைக்கு முன்பாக நடைபெற்றது. அதுவே சச்சின் என்னிடம் சொன்னதாகும் என்று ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார் யுவராஜ் சிங்.