சுப்மன் கில்லிற்கு என் கதையை கூறி பலப்படுத்தி இருக்கிறேன் – அப்டேட் கொடுத்த யுவராஜ் சிங்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காதுகொன்றிருந்த உலக கோப்பை 2023 தொடரானது ஏற்கனவே தொடங்கி போட்டிகளானது பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இதுவரை இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று நல்ல நிலைமையில் இந்த உலக கோப்பையில் இருக்கிறது. இருந்த போதிலும் இந்தியாவின் தொட

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காதுகொன்றிருந்த உலக கோப்பை 2023 தொடரானது ஏற்கனவே தொடங்கி போட்டிகளானது பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இதுவரை இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று நல்ல நிலைமையில் இந்த உலக கோப்பையில் இருக்கிறது. இருந்த போதிலும் இந்தியாவின் தொடக்க வீரர்களுக்கான விவாதம் இன்னும் முடிந்த பாடிலை. குறிப்பாக முதல் போட்டியில் இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா டக் ஆனாதால் பெரும் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய இருந்தது.

ஏனென்றால் கடந்த சில போட்டிகளாகத்தான் இந்தியா இஷான் கிஷனை தொடக்க வீரராக பயன்படுதுகிறது. அதற்கு முன்னதாக சுப்மன் கில் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து களமிறங்கும் நிலையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடவில்லை, இருந்த போதிலும் உடல் தேறிவரும் சுப்மன் கில் இன்று மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளார். இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் உடல் நிலை சரியில்லாமல் இருந்த சுப்மன் கில்லிற்கு நம்பிக்கை கொடுத்துள்ளார். அவர் பேசுகையில் ” நான் சுப்மன் கில்லை பலப்படுத்தி இருக்கிறேன். நான் புற்றுநோயுடன் போராடி உலகக் கோப்பையில் விளையாட எப்படி விரைவாக தயாராகி வந்தேன் என்பது குறித்து பேசினேன். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு அவர் தயாராக இருப்பார் என நம்புகிறோம்.

உங்களுக்கு காய்ச்சல் மற்றும் டெங்கு இருக்கும்போது கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது மிகவும் கடினம். அதை நான் அனுபவித்திருக்கிறேன். எனவே அவர் உடல்தகுதியுடன் இருந்தால் நிச்சயம் விளையாடுவார் என்று நம்புகிறேன் என்றார் யுவராஜ்.மேலும் பேசிய அவர் கூறுகையில் “இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடைபெறுவது இரு அணிகளுக்கும் நல்லது, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தப் போட்டியைக் காண ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள்.

இந்த மீண்டும் வராது என்று நான் கூறுவேன், அதை அனுபவிக்க வேண்டும். இந்தப் போட்டி மட்டுமல்ல, இதற்குப் பிறகும் பல போட்டிகள் உள்ளன. இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும் என நம்புகிறோம். தற்போது நடந்து வரும் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியதால் இந்தியா ஏற்கனவே நம்பிக்கையுடன் உள்ளது. ரோஹித் சர்மாவின் சிறப்பான சதம் அனைவர்க்கும் நம்பிக்கை கொடுத்துள்ளது. இந்த நேரத்தில் இரு அணிகளும் அதிக நம்பிக்கையுடன் உள்ளன.

முகமது ரிஸ்வான் சிறப்பான பார்மில் உள்ளார். இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் அணியானது இலங்கைக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் துரத்தினார்கள், அது அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை