என்னதான் இருந்தாலும் ரிங்கு சிங் செய்தது தவறு – யுவராஜ் சிங் கண்டனம்.

கேகேஆர் தோல்வி குறித்து யுவராஜ் சிங் கூறியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த வியாழக்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணி முதல் வெற்றி

By ·

கேகேஆர் தோல்வி குறித்து யுவராஜ் சிங் கூறியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த வியாழக்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணி முதல் வெற்றியைப் பெற்றது. டெல்லியின் பந்துவீச்சுக்கு முன்னால் மொத்த கேகேஆர் அணியும் சீட்டாட்டம் போல் சிதறியது. ஆரம்பம் முதலே ஆதிக்கத்தை செலுத்திய டெல்லி அணி அடுத்தடுத்து கொல்கத்தா அணியின் வீரர்களை வெளியேற்றினர்.

மந்தீப் சிங் 12 ரன்களிலே வெளியேறி அணிக்கு மீண்டும் தடுமாற்றத்தையே தந்தனர். அதிரடி நாயகன் ரிங்கு மற்றும் சுனில் நரைன் சொற்ப ரன்களிலே வெளியேறினார்கள். கொல்கத்தா அணியின் வீரர்கள் வந்த வேகத்திலே சென்றனர். ஜாசன் ராய் 43ரன்களில் வெளியேற, கடைசியில் ரஸல் சில சிக்சர்களை பறக்க விட்டு அணிக்கு நம்பிக்கையை சேர்த்தார். ரஸல் 37 ரன்களை சேர்த்தார் இருப்பினும் 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது கொல்கத்தா அணி.

128 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் அணிக்கு அற்புதமான தொடக்கத்தையே கொடுத்தனர். ப்ரித்வி ஷா 13 ரன்களில் வருன்னிடம் விக்கெட்டை இழக்க வார்னர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அணிக்கு நம்பிக்கை சேர்க்கும் வகையில் வார்னர் அரை சதத்தை பூர்த்தி செய்தார். 57 ரன்களில் வருனின் சுழல் பந்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இறுதியில் சுலபமாக வெற்றிபெற வேண்டிய போட்டியில் போராடி வெற்றிபெற்றது டெல்லி அணி.

இந்த நிலையில் முன்னாள் இந்திய அணியின் வீரர் யுவராஜ் சிங் இந்த போட்டி குறித்து பேசியுள்ளார் அவர் கூறுகையில் “மன்தீப் சிங் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அணுகுமுறை எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. உங்களுக்கு என்னதான் உங்களின் மீது தன்னம்பிக்கை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், விக்கெட்கள் விழும்போது பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி வீழ்கின்ற விக்கெட்டின் ஆபத்தில் இருந்து அணியை காப்பாற்ற வேண்டும். 15 ஓவர்கள் வரையில் நீங்கள் ஒரே மனநிலையை கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் இறுதியில் ரசல் இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு வைரலாக நிலையில் நெட்டிசன்கள் பல கேள்விகளை முன்வைக்கின்றனர். அதாவது ரன்கள் விழுகின்ற நேரத்தில் பொறுமையாக ஆடி அணியை அந்த வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற வந்தவர்கள் பெரிய ஷாட்டுகளை அடிக்க முயற்சி செய்தனர். குறிப்பாக ரிங்கு சிங் அப்படி பந்தை அடிக்கும் போதுதான் ஆட்டமிழந்தார். ஆனால் அதற்கு பிறகு வந்த அதிரடி ரசல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பொறுமையாக ஆடி அணிக்கு ரன்களை சேர்ந்தார். ஒரு வேலை யாராவது ஒரு பேட்ஸ்மேன் அவருக்கு துணையாக இருந்திருந்தால் கண்டிப்பாக 150க்கு மேல் ஸ்கோர் சென்றிருக்கும் என்பது ரசிகர்கள் கருத்தாக உள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை