“தோனி எனக்கு அண்ணன் போன்றவர்” அவருக்கு பிறகு ஹர்திக் பாண்டியாதான் இந்த விஷயத்தை செய்கிறார் – பாராட்டிய சாஹல்.

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டங்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. அவர் கேப்டனாக ஆனவுடன் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்று தந்தார் தோனி. பின்னர் இந்த வெற்றி தொடர ஆரம்பித்து பல போட்டிகளில் வெற்றி பெற்ற தோனி 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டி

By ·

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டங்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. அவர் கேப்டனாக ஆனவுடன் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்று தந்தார் தோனி. பின்னர் இந்த வெற்றி தொடர ஆரம்பித்து பல போட்டிகளில் வெற்றி பெற்ற தோனி 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் பல ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று கொடுத்தார். இதற்கு பிறகு 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியிலும் கோப்பையை வென்று கொடுத்த தோனி ஐபிஎல் போட்டியிலும் சென்னை அணிக்காக 5 கோப்பைகளை வென்றது கொடுத்தார்.

மேலும் அழுத்தமான போட்டிகளில் தோனி எப்போதுமே ஸ்டெம்புகளுக்கு பின்னல் ஒரு விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் சரியான தகவல்களை பந்துவீச்சாளர்களுக்கும், பீல்டர்களுக்கும் கொடுப்பார். சொல்லபோனால் பந்துவீச்சாளர்களே ஆச்சரியப்படும் படி சரியான பீல்டிங் செட் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் தோனிக்கு இருக்கிறது என்ற பல முன்னாள் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களே புகழாரம் சுட்டியிருக்கின்றர்.

அதே போல தோனி தன்னுடைய பந்துவீச்சாளர்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பார் என்றும், அதனாலேயே தங்களினால் அழுத்தமான சூழ்நிலையிலும் கூட சிறப்பாக செயல்பட முடிகிறது என்றும் பல குறி நாம் கேள்வி பட்டிருக்கிறோம். அந்த வகையில் தான் தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் தோனி குறித்தும் மற்ற கேப்டன்கள் குறித்தும் பேசியுள்ளார்.

தோனி எனக்கு சகோதரர் போன்றவர் :

அவர் கூறுகையில் “தோனி பாய் கேப்டனாக இருந்த போது எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அதே போன்றுதான் தற்போது பாண்டியா கேப்டனாக இருக்கும் போது முழு சுதந்திரம் கொடுக்கிறார். நான் இதனை இப்படித்தான் பார்க்கிறேன் – உங்களுக்கு குடும்பத்தில் மூன்று சகோதரரக்ள் இருக்கின்றனர். தோனி எனக்கு மூத்த சகோதரர், அதற்கு பிறகு விராட் கோலி, அதற்கு பிறகு ரோஹித் ஷர்மா, அதற்கு பிறகு ஹர்திக் பாண்டியா என அனைவரும் ஒரே மாதிரிதான் இறுகின்றனர்.

அப்போது முதல் இப்போது வரையில் அதுவும் மற்றம் அடையவில்லை, அனைவரும் தங்களுடைய அணி வெற்றிபெற வேண்டும் என்று தான் நினைத்து விளையாடுகின்றனர். தோனி இருக்கும் போது பந்துவீச்சாளர்களுக்கு பில்ட் செட் செய்வது முதற்கொண்டு எங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார்.அதையேதான் தற்போது ஹர்திக் பாண்டியாவும் செய்து வருகிறார். பந்துவீச்சாளர்களாகிய நாங்கள் எங்களுக்கு தேவையான பீல்டிங்கை செட் செய்து கொள்ள முடிகிறது.

இப்போது கூட ஹர்திக் பாண்டியா பந்துவீச்சார்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப பீல்டிங் செட் செய்து கொள்வது அனுமதிப்பார். ஒருவேளை எங்களுடைய ஐடியா ஒத்துவராத பட்சத்தில் அவர் எங்களுக்கு அறிவுரைகளை கூறுவார். இது வரவேற்க தக்க கூடிய செயல் தான் கேப்டனாக இருக்கும் போது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எப்போதுமே அவரிடம் இருந்து சுதந்திரத்தை பெறுகின்றனர் என்றார் சாஹல்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை