என் கிரிக்கெட் வாழ்க்கையை விராட் கோலி முடித்து விட்டதாக கூறினேனா? ஜாகீர் கான் கொடுத்த விளக்கம்.
இந்திய கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் மிகச்சிறந்த இடது கை பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஜாகீர் கான் தான். இவர் தன்னுடைய கிரிக்கெட்டில் பல விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மேலும் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் இவர் மிகவும் சிறந்தவர். ஆனால் எவ்வளவு பெரிய பந்துவீச்சாளராக இருந்தாலும் அவர்களுக்கு
இந்திய கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் மிகச்சிறந்த இடது கை பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஜாகீர் கான் தான். இவர் தன்னுடைய கிரிக்கெட்டில் பல விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மேலும் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் இவர் மிகவும் சிறந்தவர். ஆனால் எவ்வளவு பெரிய பந்துவீச்சாளராக இருந்தாலும் அவர்களுக்கு சில நேரங்களில் மோசமான சம்பவங்கள் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஜாகீர் தான் இருந்தார். அப்போது ஒரு சம்பவம் நடைபெற்றது. அந்த சம்பவத்தை இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டியின் போது இஷாந்த் ஷர்மாவும், ஜாகீர் காணும் பேசிக்கொண்டனர். அப்படி பேசிய இஷாத் ஷர்மா முதலில் பேசுகையில் “எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. அப்போது பிரெண்டன் மெக்கல்லம் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது விராட் கோலி அவருடைய கேட்சை முன்னதாக விட்ட நிலையில் அவர் 300 ரன்களை விளாசியிருந்தார். எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது. அது மத்திய உணவு நேரம். விராட் கோலி ஜாக்கிடம் பந்து மன்னிப்பு கேட்டார். அதற்கு ஜாக் கூறினார் கவலை படாதீர்கள் அவரை ஆட்டமிழக்க செய்து விடாம் என்றார்.
அதற்கு பிறகு டீ இடைவெளியின் போது கோலி மீண்டும் வந்து ஜாக்கிடம் மன்னிப்பு கேட்டார், அதற்கு ஜாக் கவலை ப வேண்டாம் என்று கூறினார். பின்னர் மூன்றாவது நான் கோலி டீ இடைவெளியின் போது மன்னிப்பு கேட்க விராட் கோலியிடம் ஜாக் என்னுடைய வாழ்க்கையே முடித்து விடீர்களே என்று கூறியதாக இஷாந்த் ஷர்மா கூற, இடைமறித்த ஜாஹிர் கான் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விளக்கினார்.
உண்மைமை உடைத்த ஜாக் :
அவர் கூறுகையில் “நான் விராட் கோலியிடம் என்னுடைய வாழக்கையை முடித்து விட்டாயே என்றெல்லாம் கூறவில்லை. நான் அவரிடம் கூறினேன் இரன்டு பேருக்கு மட்டும் தான் இப்படி நடந்திருக்கிறது. ஒருமுறை விக்கெட் கீப்பர் கிரண் மோரே கேட்சை விட்டார். அதனால் அன்று கிரகாம் கூச் முச்சதம் அடித்தார். இப்போது விராட் கோலி கேட்சை விட்டார் மெக்கல்லம் 300 ரன்களை அடித்துள்ளார் என்று கூறினேன்.
ஆனால் நான் அப்படி கூறியது விராட் கோலிக்கு பிடிக்கவில்லை, என்னிடம் அப்படி பேசாதீர்கள் என்று விராட் கூறினார். அவர் கேட்ச் விட்டு ரன்களை வருவது வருத்தமாக இருந்திருக்கலாம் என்றார் ஜாகீர் கான். இந்நிலையில் அந்த போட்டியில் ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே நேரம் ரஹானே சதம் அடிக்கஇரண்டாவது இன்னிங்கில் விராட் கோலி 105ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்து போட்டியானது டிராவானது குறிப்பிடதக்கது.