கிடைத்த நல்ல வாய்ப்பை தவற விட்டுட்டீங்களே – இந்திய வீரரை விமர்சித்த முன்னாள் MI பயிற்சியாளர் ஜாகீர் கான்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் களமிறங்கிய இந்தியா அற்புதமாக தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில் இஷான் கிஷனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஏனென்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் போட்டியானது குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் களமிறங்கிய இந்தியா அற்புதமாக தொடங்கினாலும் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில் இஷான் கிஷனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் முதல் டெஸ்ட் போட்டியில் இஷான் கிஷான் 2 பந்துகள் விளையாடி 1 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் டக்ளர் கொடுத்த்தினால் அவர் வெளியேறினார்.
அந்த போட்டியில் இந்தியா சுலபமாக வெற்றி பெற்றது. ஆனால் இந்த போட்டியில் இந்தியாவிற்கு ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ரன்கள் அடிக்கவும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த நேரத்தில் களமிறங்கிய இஷான் கிஷான் 37 பந்துகளை எதிர்கொண்டு 25 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 400 ரன்களை கிடைக்க அஸ்வின் அடித்த அரை சதம் உதவியது. இப்படிபட்ட நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் ஜாகீர் கான் இஷான் கிஷனை விமரசித்துள்ளார்.
ஜாகீர் கான் பேசியது :
அவர் கூறியதாவது “இஷான் கிஷான் தொடக்கத்தில் நன்றாகத்தான் விளையாட தொடங்கினார். ஆனால் அவர் ஆட்டமிழந்த பிறகு மிகவும் ஏமாற்றமடைந்திருப்பார். ஏனென்றால் நீங்கள் 30-40 டெலிவரிகளை விளையாடி 25 ரன்கள் எடுத்தது பின்னர் ஆட்டமிழந்து வெளியே செல்வதற்கு தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து விடலாம் என்று டெஸ்ட் போட்டிகளில் சொல்லுவார்கள்.
இருப்பினும், நீங்கள் இப்படி வெளியேறினால், குறிப்பாக அவர் விளையாடிய ஷாட் டி 20 அல்லது வெள்ளை பந்து விளையாட்டில் விளையாடப்படுவது. உண்மையில் இப்படி ஆட்டமிழத்தால் கண்டிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏமாற்றம் அளிக்கும். அதே நேரத்தில் அவர் இந்த போட்டியில் விளையாடி இருந்தால் அது ஒரு நல்ல நாக்காக இருந்திருக்கும். ஆனால் அவர் அந்த நல்ல வாய்ப்பை விட்டுவிட்டார் என்றார் ஜாகீர் கான்.
அஸ்வின் பற்றி ஜாகீர் கான் :
மேலும் அஸ்வின் அற்புதமாக விளையாடி அரை சதம்அடித்தது குறித்து பேசிய அவர் கூறுகையில் “அஸ்வின் இந்த போட்டியில் கொடுத்த ஆட்டம் மிகவும் சிறப்பான ஓன்று. இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் அதிகமாக ரன்களை விளாச வேண்டும். ஏனென்றால் உங்களுடைய அணி 400 ரன்களை கடந்து விட்டது என்றால் அந்த போட்டி உங்களுக்கு சுலபமான ஒன்றாக இருக்கும்.
அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியில் 78 பந்துகளில் 56 ரன்களை விளாசினார். அவருக்கு தெரியும் எதிர் இருக்கும் வீரரிடம் இருந்து உதவி கிடைக்காது என்று. எனவே விரைவாக ரன்களை அடித்தால் சரியாக இருக்கும் என்றும் முடிந்த அளவிற்கு பலமாக அடிக்க முயற்சி செய்து வேகமாக ரன்களை குவிக்க முயன்றார். அதற்கு அஸ்வின் கடினமாக முயற்சியும் செய்தார் என்று அஸ்வினை பாராட்டியும் இஷான் கிஷனை விமர்சித்தும் பேசியுள்ளர் ஜாகீர் கான்.