இந்தியாவில் எப்படி இளம் வீரர்களை கண்டறிய ஐபிஎல் போட்டியானது உருவாக்கப்பட்டதோ அதே போன்று தற்போது பல இடங்களில் லீக் போட்டிகளானது நடந்து வருகிறது. அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த சில ஆண்டுகளாக LPL என்ற பெயரில் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் பாகிஸ்தான், நேபாளம், வங்காள தேசம் போன்ற பல நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வருடம் ஸ்ட்ரீஸ்க்கர்ஸ் அணிக்காக பாஸ்கிதான் அணியின் கேப்டான் பாபர் அசாம் விளையாடி வருகிறார். ஏற்கனவே சில போட்டிகள் நடந்த நிலையில் அற்புதமான செயல்திறனை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் தான் பாபர் LPL போட்டியில் விளையாடுவது குறித்தும், இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாகிய விராட் கோலி குறித்தும் தன்னுடைய கருத்துக்களை கூறியுள்ளார் முன்னாள் ஸ்ரீலங்கா வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ்.
அவர் கூறுகையில் “பாபர் இந்த போட்டியில் கேப்டனாக இல்லாமல் ஒரு பேட்டராக விளையாட விரும்பினார். அவருடைய முடிவை நாங்கள் மதித்தோம். நிரோஷன் டிக்வெல்ல எங்கள் அணித்தலைவராக இருக்கிறார். நீங்கள் பாபர் ஆசாமை எடுத்துக் கொண்டால் தற்போது அவர் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேலும் அவர் செயல்படும் விதம் மற்றும் அணிக்கு பங்களிக்கும் விதம் அற்புதமானது. எல்லா இளைஞர்களும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவர் LPL போட்டியில் விளையாடுவதைக் காண ஆவலாக உள்ளேன்.

பாகிஸ்தான் அணிக்கு ஒரு தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் என்பதை நாங்கள் அறிவோம். முதலில் களமிறங்கி ரன்களை எடுப்பதே அவரது பங்கு. எங்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சைமன் ஹெல்மட் மற்றும் உதவிப் பயிற்சியாளர் ஜெரோம் ஜெயரத்னா ஆகியோர் கொழும்பு ஸ்டிரைக்கர்களுக்கு எது பொருத்தமானது மற்றும் அவரிடமிருந்து நாம் எதைப் பெற வேண்டும் என்பதைப் பற்றி தெரியும். எனவே அவர்களை பயன்படுத்தி பாபர் அசாமிடம் இருந்து சிறந்த்தை பெறுவோம்.

விராட் கோலி குறித்து :
மேலும் பேசிய விராட் கோலி குறித்தும் பேசினார். அவர் கூறுகையில் “பெரும்பாலான ரசிகர்கள் கோலி எப்போதும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர் ஓரிரு ஆட்டங்களில் தோல்வியுற்றால் விமர்சிக்கின்றனர். ஏனெனில் கோலி தனது வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே ரன்களை குவித்து வருகிறார். ஒரு வீரர் சில சமயங்களில் தடுமாறுவார்கள். ஆனால் அவரது திறமையை பற்றி எந்த சந்தேகமும் இல்லை
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கூட சிறப்பாக செயல்பட்டார். விராட் இந்திய கிரிக்கெட்டை மேம்படுத்தி பங்களிக்க விரும்புகிறார். சச்சின் டெண்டுல்கரை கூட ஒவ்வொரு போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது எல்லா நேரத்திலும் நடக்காது. ஒரு வேளை அதனால்தான் கோலிக்கு இப்போது பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் அவரது உடர்தற்குதி மற்றும் ஆவரது நுட்பம் மிகவும் சிறந்தது என்றார் அவர்.





