தற்போது பல வகையான கிரிக்கெட் போட்டிகள் இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் என்பதற்கு எப்போதுமே பெரிய அளவில் மதிப்பு இருக்கிறது. ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஒரு வீரரின் முழு திறமையையும், தரத்தையும் சோதிக்கும் ஒரு விளையாட்டாகும். அந்த வகையில் விராட், கேன் வில்லியம்சன், ஸ்மித் போன்றவர்கள் அவர்களுடைய நாட்டிற்காக சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் ரன்களை குவிகின்றனர்.

இதனால் இந்த வகையான வீரர்கள் கிரிக்கெட் வல்லுநர்கள் ஃபேப் 4 என்று கூறுவதுண்டு. இந்த பட்டியலில் ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கடக்கும் நிலைமையில் இருக்கிறார். அதே போன்று ஸ்மித் 9000 ரன்களை கடந்துளார். கேன் வில்லியம்சனும் 8000 ரன்களை கடந்துள்ளார். ஆனால் விராட் கோலி 2021 ஜனவரிக்கு பிறகு 1200 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் சராசரியும் 29.69ஆள் குறைத்து 8479 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
மேலும் கடந்த உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியிலும் மோசமாக விளையாடிய விராட் ரன்கள் எதுவும் பெரிதாக எடுக்கவில்லை. இதனிடையே இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா விராட் கோலியின் பார்ம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “கிரிகெட்டிடை பொறுத்தவரையில் பேப் 4 என்ற வார்த்தை இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். அதனை இப்போது பேப்3 என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் போன்றவர்களின் சராசரி 50 ஆக இருக்கிறது அதே போல அவர்களினால் 6 சதங்கள் வரையில் சுலபமாக அடிக்க முடிகிறது. ஆனால் விராட் கோலியுடைய பேட்டிங் ஃபார்ம் என்பது எந்த நிலையில் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். நீங்கள் நினைக்கலாம் பாபர் அசாம் பெயரை இதில் சேர்க்கலாம் என்று. டெஸ்ட் போட்டிகளில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் இப்போது அவர் பேப் 4 ல் இடம்பெறுவர் என்று எனக்கு தோன்றவில்லை.

ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் போன்றவர்கள் அந்த இடத்தில் இருக்கின்றனர். ஆனால் விராட் மற்றும் வார்னர் போன்றவர்கள் அந்த பட்டியலில் இடம்பிடிக்க மாட்டார்கள். இறுதி கட்டத்தில் இருக்கும் வார்னர் பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் விராட் கோலியால் மீண்டும் பழைய பார்மிற்கு வர முடியும் என்று தோன்றுகிறது. அவரால் மிண்டும் திரும்ப முடியுமா என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
இதனிடையே ஏற்கனவே பல முறை விராட் கோலி உட்பட பல கிரிக்கெட் வீரர்களை பற்றியும் இதே கருத்தை தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹீசைனும் சொல்லியது குறிப்பிடதக்கது. இந்நிலையில் வரும் வேஸ்ட் இண்டீஸ் மற்றும் உலக கோப்பையில் இவர்களின் விமர்சனங்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





