உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட IND vs WI முதல் டெஸ்ட் போட்டியில் தான் யார் என்பதை இத உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது அந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் இது சரியான தேர்வாக இருக்கவில்லை. ஏனென்றால் இந்தியாவின் பந்துவீச்சிற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 150 ரன்களில் சுருண்டது. இதற்கு முக்கியமான காரணம் அஸ்வின் மற்றும் ஜடேஜா.

இதனையடுத்து இந்திய அணியானது சிறப்பாக விளைய்டி 421 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளர் கொடுத்தது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்கை காட்டிலும் மிகவும் மோசமாக விளையாடி 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த இன்னிங்கில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தன்னுடைய முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
மேலும் இந்த போட்டியின் மூலம் அஸ்வின் சர்வதேச போட்டியில் 707 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்டர் சாதனையை படைத்துள்ளார். இனிலில் தான் தன்னுடைய சாதனை பற்றி பேசிய அஸ்வின் தன்னுடை ஹீரோ யார் என்பதை பற்றியும் பேசியுள்ளார்.

அஸ்வின் கொடுத்த பேட்டி :
அவர் கூறுகையில் “நான் உண்மையிலேயே தாழ்மையுடன் இருக்கிறேன், ஏனென்றால் என்னுடைய கிரிக்கெட் வலக்கையில் நான் ஒரு கட்டத்தில் சுழற்பந்து வீச்சாளராக வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் பேட்டிங் தான் செய்து கொண்டிருந்தேன். பின்னர் தான் நான் சுழற்பந்து வீச்சாளராக மாறினேன். ஹர்பஜன் சிங் என்னுடைய ஹரோ. நான் கடந்த 2001ஆம் ஆண்டு நடந்த தொடரில் ஹர்பஜன் சிங் ஆடியதை விரும்பி பார்த்தேன். அப்போது முதலே அவரது பவுலிங் ஆக்ஷனை காப்பியடிக்க ஆரம்பித்தேன்.
மேலும் அணில் கும்ளேவின் மிகப்பெரிய ரசிகர் என்றே சொல்லலாம். அஸ்திரேலியாவிற்கு எதிராக இருவரும் அற்புதமான வெற்றியை நாள் 4 மற்றும் 5 களில் பெற்று கொடுத்தார். நான் ஒரு சுழற்பந்து வீச்சாளராக வருவேன் என்று கனவிலும் கூட எதிரிபார்த்தில்லை.அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரின் பட்டியலில் நானும் இடம் பெற்றுள்ளேன் என்று கூறுவது கூட எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஓன்று. எனக்கு அதிருஷ்டம் இருப்பதாக உணர்கிறேன்.
ஒரு கிரிக்கெட் வீரராக வரும் வழியில் எனக்கு நிறைய விருதுகள் வழங்கப்பட்டன, மேலும் எனக்கு முன்னால் இருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்நிலையில் அஸ்வின் தற்போது படைத்திருக்கும் பல சாதனைகளுக்கு சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




