இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முதலில் இருந்து வருகிறது. இன்று நாலாவது போட்டியானது ராஞ்சியில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது.இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களை அடித்து இருந்தது.

மேலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே செயல் பட்டு இருந்தனர். ஜடேஜா 4 விக்கெட்டையும் இதில் குறிப்பாக அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ்2 விக்கெட்டுகளையும் அஷ்வின் 83 ரன்களை விட்டுகொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.அதன்பின் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்தில் சற்று சொதப்பல் இருந்தாலும் அதன் பின் ஜுரெலின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 307 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அதில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜுரேல் 90 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 73 ரன்களையும் கில் 38 ரன்கள் அடித்திருந்தனர்.
இன்றைய நாளிலே மீண்டும் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி 145 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதில் இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் க்ராலி 60 ரன்களையும் அடித்திருந்தனர். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அவர்கள் இன்றைய நாளிலே 145 ரன்னில் அனைத்து விக்கெட் இழந்தனர் இதில் ரவிச்சந்திர அஷ்வின் 5 விக்கெட்டுகளையும் குல்திப் யாதவ் நான்கு விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

மீண்டும் இன்றைய நாளிலே பேட்டிங் செய்வது இந்திய அணி 40 ரன்கள் எடுத்து விக்கெட்டுகளை இதுவரை எதுவும் இழக்காமல் இருந்து வருகிறது இந்திய அணிக்கு இன்னும் வெற்றி பெறும் 152 ரன்கள் மட்டுமே தேவை இன்னும் இரண்டு நாட்கள் எஞ்சிய நிலையில் உள்ளது. இதில் இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் அஷ்வின் ஒரு சாதனையை படைத்து இருந்தார். அது என்ன வென்றால் இந்திய ஆடுகளத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் மற்றும் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற அணில் கும்ப்ளேவின் சாதனையும் அவர் சமன் படுத்தி இருந்தார்.





