கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க தொடர்களில் ஒன்றான ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 0- 2 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இதனால் இங்கிலாந்து அணி தங்களுடைய சொந்த மண்ணில் அவ்பமானதை தவிர்ப்பதற்கு மூன்றாவது போட்டியில் போராடி வருகிறது. ஏனென்றால் ஆஷஸ் போட்டியில் ஒரே ஒரு முறை மட்டும்தான் 0 – 2 என்று இருக்கும் போது காம்பேக் கொடுத்த வெற்றி பெற்றது ஆஸ் அணி 1937/38 ஆண்டுகளில்.

தற்போது 3வது போட்டியானது ஹெடிங்கிலே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்கில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து சிறப்பாக விளையாடிய ஆஸ்திரலேய அணியின் மிச்சல் மார்ஸ் அதிரடியாக ஆடி 17 போர்ஸ் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 118 பந்துகளில் 118 ரன்களை விளாசினார். இந்த இன்னிங் இங்கிலாந்து அணிக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் மட்டுமே விளாசியது.
இந்நிலையில் அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்த ரன்களை விரைவாக கடக்கும் என்றிருந்த நிலையில் ஆரம்பவே அதிர்ச்சி கொடுக்கும் மளமளவென விக்கெட்டுகளை வீழ்த்தியது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுக மறுபக்கம் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 108 பந்துகளில் 80 ரன்களை விளாசினார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் பெரிதா ரன்கள் எதையும் அடிக்க வில்லை.

மெயின் அலி 21 ரன்களை மட்டுமே அடிக்க மார்க் வுட் 24 ரன்களும், வோக்ஸ் 10 ரன்கள் மட்டுமே அடித்தார்கள். இதனால் இங்கிலாந்து அணி அணைத்து விக்கெட்டுகளையும் முதல் நாளில் இழந்த நிலையில் 237 ரன்கள் மட்டுமே அடித்து. இதனையடுத்து ஆஸ்திரேலியா விளையாடிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இங்கிலாந்தின் பந்து வீச்சாளர்களை எதிர்த்து சிறப்பாக கையாண்டது ஆஸ்திரலேயா 2வது நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை எடுத்திருந்தது.

இதனிடையே 3வது நாளில் மழை பெய்யவே வெகு நேரம் போட்டியானது தடைபட்டது. பின்னர் ஒரு வழியாக போட்டி தொடங்கிய நிலையில் ஆஸ்திரேலியா நாளின் இரண்டாவது ஓவரிலேயே மிட்சல் மார்ஸ் விக்கெட்டை இழந்தது. பின்னர் படிப்படியாக மிட்சல் ஸ்டார்க், அலெக்ஸ், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட பேட்ஸ்மான்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது இங்கிலாந்தின் பந்துவீச்சு.

இறுதியில் ஆஸ்திரலியா 67.1 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் மட்டுமே 111 பந்துகளை 77 ரன்களை விளாசினார். இங்கிலாந்தில் சார்பில் மொயின் அலி மற்றும் மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளையும், ப்ரோடு மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் சாக் கிராலி மற்றும் பென் டக்கெட் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்

பின்னர் இவர்கள் இருவரும் ஆட்டமிழக்க, மெயின் அலி 5 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனையாடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 21 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் பேன் ஸ்டாக்ஸ் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் போட்டியானது இங்கிலாந்திடம் இருந்து மெதுவாக விலகி சென்ற நேரத்தில் பொறுமையாக விளையாடிய ஹேரி ப்ரூக் 93 பந்துகளில் 75 ரன்கள் என்ற அணிக்கு தேவையானதை செய்து ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய வோக்ஸ் 47 பந்துகளில் 32 ரன்கள் விளாசி இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
இதனை மூலம் இங்கிலாந்து அணியானது கடந்த 7 போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக ஆஷஸ் தொடரில் வெற்றிபெற்றுள்ளது. இன்னமும் இரண்டு போட்டிகள் இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணிக்கு இந்த ஆஷஸ் தொடரை கைப்பற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது.





