வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரானது தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சிறப்பாக விளையடி 3 போட்டிங்களில் 2 போட்டிகளால் அஸ்திரேலியாவும் பின்னர் 3வது போட்டியில் அழுத்தத்துடன் சிறப்பாக் விளையாடிய இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தற்போது 2-1 என்ற கணக்கில் இருக்கிறது. இதனால் 4வது போட்டியானது மிகவும் கடுமையாகவும் அதே நேரத்தில் சுவாரசியமாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இப்படிபட்ட நிலையில் தான் நான்காவது போட்டியானது நேற்று இந்திய நேரப்படி நேற்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் முதலாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான உமேஸ் கவாஜா 4வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு பொறுமையாக விளையாடிய டேவிட் வார்னருக்கு இந்த போட்டியிலும் மோசமான தொடக்கமாக 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதற்கு பிறகு வந்த ஸ்மித் மற்றும் லபுச்சானே இருவரும் இணைத்து ரன்களை குவிக்க பொறுமையாக ஆடிவந்த ஸ்மித் 50 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்க் வுட்டிடம் ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் இவருக்கு பிறகு வந்த டிராவிஸ் ஹெட் லபுச்சானேவுடன் கைகோர்க்க லபுச்சானே அரை சதம் விளாசினார். மேலும் அரை சதம் எடுக்க இருந்த நேரத்தில் டிராவிஸ் ஹெட் 49 ரன்களில் ஆட்டமிழந்தது பெவிலியன் திரும்பினார். இறுதியில் ஆஸ்திரேலியா 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது

இங்கிலாந்து பேட்டிங் :
இதனையடுத்து காமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மூன்றாவது ஓவரிலேயே தொடக்க வீரர் பென் டக் ஆட்டமிழந்தார். ஆனால் இந்த போட்டியில் மொயின் அலி மூன்றவதாக களமிறங்கினார். ஆச்சரியமளிக்கும் வகையில் மொயின் அலி அற்புதமான அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். ஆனால் இங்கிலாந்து அணிக்கு தேவையான அந்த தொடக்கத்தை கொடுத்தார்.
இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய ஜாக் கிராலி வெறும் 93 பந்துகளில் சதம் விளாச இவருக்கு துணையாக ரூட் பக்கபாலமாக விளையாட ரூட் 85 ரன்களில் ஆட்ஸ்மிழந்தார். மேலும் அற்புதமாக விளையாடிய ஜாக் கிராலி 189 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹார்ரி ப்ரூக் விளையாடி வர இங்கிலாந்து அணியானது 4 விக்கெட்டுகளை இழந்து 384 ரன்களை விளாசியுள்ளது.

வரலாறு படைப்பாரா பென் ஸ்டோக்ஸ் :
இந்நிலையில் ஆஷஸ் வரலாற்றில் ஒரே ஒருமுறை மட்டும் தான் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு அவர்களை எதிர்த்து நின்ற அணி அடுத்த மூன்று போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்த சம்பவமானது கடந்த 1936/37 ஆஷஸ் போட்டியின் போது நடந்தது. தொடக்கத்தில் இங்கிலாந்து அணியானது 2 – 0 என்று முன்னிலையில் இருக்க அடுத்த முன்றது போட்டிகளிலும் காம்பேக் கொடுத்து டான் ப்ராட்மேன் தலைமையிலான ஆஸ்திரேலிய வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.
இப்படியொரு நிலையில் 4வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 5வது போட்டியிலும் வெற்றி பெற்றது என்றால் வரலாற்று புத்தகங்களில் இங்கிலாந்து கேப்டனை பென் ஸ்டோக்ஸ் பெயர் கண்டிப்பாக பொறிக்கப்படும். இதனாலேயே உலக ரசிகர்களின் மொத்த கண்களும் தற்போது ஆஷஸ் பக்கம் திரும்பியுள்ளது.





