வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரானது தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே சிறப்பாக விளையடி 3 போட்டிங்களில் 2 போட்டிகளால் அஸ்திரேலியாவும் பின்னர் 3வது போட்டியில் அழுத்தத்துடன் சிறப்பாக் விளையாடிய இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தற்போது 2-1 என்ற கணக்கில் இருக்கிறது. இதனால் 4வது போட்டியானது மிகவும் கடுமையாகவும் அதே நேரத்தில் சுவாரசியமாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இப்படிபட்ட நிலையில் தான் நான்காவது போட்டியானது நேற்று இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் முதலாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான உமேஸ் கவாஜா 4வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதற்கு பிறகு பொறுமையாக விளையாடிய டேவிட் வார்னருக்கு இந்த போட்டியிலும் மோசமான தொடக்கமாக 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதற்கு பிறகு வந்த ஸ்மித் மற்றும் லபுச்சானே இருவரும் இணைத்து ரன்களை குவிக்க பொறுமையாக ஆடிவந்த ஸ்மித் 50 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்க் வுட்டிடம் ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் இவருக்கு பிறகு வந்த டிராவிஸ் ஹெட் லபுச்சானேவுடன் கைகோர்க்க லபுச்சானே அரை சதம் விளாசினார். மேலும் அரை சதம் எடுக்க இருந்த நேரத்தில் டிராவிஸ் ஹெட் 49 ரன்களில் ஆட்டமிழந்தது பெவிலியன் திரும்பினார்.

மேலும் இந்த விக்கெட் மூலம் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிரோட் சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு பிறகு வந்த மிட்செல் மார்ஸ் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் சிறப்பாக விளையாட மிட்செல் மார்ஸ் அரை சதம் விளாசினார். ஆனால் அதற்கு அடுத்த ஓவரிலேயே மிட்செல் மார்ஸ் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் கிறிஸ் வோக்ஸிடம் ஆட்டமிழந்தனர்.
STOP THAT JONNY BAIRSTOW! 🤯 #EnglandCricket | #Ashes pic.twitter.com/aZ7wKcncRW
— England Cricket (@englandcricket) July 19, 2023
ஜானி பேர்ஸ்டோவ் வீடியோ :
இந்த விக்கெட்டில் தான் ஒரு அற்புதமான கேட்சை பிடித்து அவுட் செய்தார் ஜானி பேர்ஸ்டோவ். அதாவது விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் மறுபக்கம் மிட்செல் மார்ஸ் அற்புதமான விளையாட்டை விளாடிவந்தார். இதனால் இவரது விக்கெட் இங்கிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அந்நிலையில் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை மிட்செல் தடுக்க முயன்ற போது எட்ஜ் வாங்கி விக்கெட் கீப்பரிடம் சென்றது அதனை மிகவும் அற்புதமான பாய்ந்து பிடித்தார் ஜானி பேர்ஸ்டோவ்.
மேலும் அந்த கேட்சின் மூலம் தன்னுடைய விக்கெட் கீப்பிங் பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஜானி பேர்ஸ்டோவ். அந்த வீடியோ பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் இருவரும் நின்று பேட் செய்த நிலையில் முதல் நாள் முடிவில் அஸ்திரேலியா 8 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்களை எடுத்துள்ளது.





