ஐபிஎல் 2023 தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சேனனி அணியால் வாங்கப்பட்டவர் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸ் இந்த வருட ஐபிஎல் 2023 சீசனில் விளையாட வந்த போதும், இங்கிலாந்து அணி நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும் அவருக்கு காலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. பென் ஸ்டோக்ஸ் இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்மே விளையாடியுள்ளார்.

இந்நிலையில் தற்போது காலில் ஏற்பட்ட காயம் குணமான நிலையில் அடுத்து வரும் ஆஷிஸ் தொடர் மற்றும் அடித்தடுத்து வரும் போட்டிகளுக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கடந்த அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தில் பயிற்சி ஆட்டம் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியை விளையாடியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த எசக்ஸ் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி தொடங்கிய இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸை வென்று பந்துவீச முடிவு செய்தது. இதன் படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு தொடக்கமே சரியாக இல்லாத நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ தொடங்கியது. இந்தியில் அயர்லாந்து அணி 56.2 ஓவர்கள் ஆடி 10 விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. பென் தூக்கெட்ட 178 பந்துகளில் 182 ரன்களையும். ஓல்லி போப் 208 பந்துகளில் 205 ரன்களையும் விளாசினார்கள். இந்தியில் இங்கிலாந்து அணி 82.4 ஓவர்கள் விளையாடி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 524 ரன்களை விளாசி டிக்ளேர் செய்தது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்கை விளையாடிய அயர்லாந்து அணி 86.2 ஓவர்கள் முடிவில் 386 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து இரண்டாவது இனிங்கை ஆடிய இங்கிலந்து அணி 12 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றி பெற்றது. இப்படிபட்ட நிலையில் தான் முதல் இன்னிங்கிலும் இரண்டாவது இன்னிங்கிலும் ஒரு கேப்டனாக பௌலிங்கும் செய்யாமல், பேட்டிங்கும் செய்யாமல் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். இப்படி புதுவகையான சாதனை படித்த பென் ஸ்டோக்ஸ்க்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருக்கிறது.





