சுப்மன் ஆட்டமிழந்தது குறித்து சர்ச்சையான கருத்துக்களை பல முன்னாள் வீரர்கள் கூறிவரும் நிலையில் அந்த கேட்சை பிடித்த கமெரூன் க்ரீன் அது குறித்து பேசியுள்ளார். உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியானது தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் அது தவறான முடிவு என்று பின்னர் தான் தெரிந்தது.

ஏனென்றால் இந்தியாவின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்ட ஆஸ்திரேலியா 2 வது நாளில் 469 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. மேலும் பந்துவீச்சில் சிற்ப்பாக செயல்பட்டு இந்தியாவை 296 ரன்களுக்குள் சுருட்டியது. இந்நிலையில் இரண்டவது இன்னிங்கை ஆடிய ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் கொடுத்தது. இதனையடுத்த தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்றைய நாள் முடிவின் போது இந்தியா 164 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் தற்போது விராட் மற்றும் ரஹானே மட்டுமே இந்திய அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய நான்காவது நாளில் ஆடும் போது ரோஹித் மற்றும் சுப்மன் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்கள். ஆனால் சிறப்பான ஆட்டத்திற்கு நடுவே சுப்மன் கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அந்த கேட்ச் சரியானதா என்று பார்க்க 3 அம்பயரிடம் சென்றபோது பந்து தரையில் பட்டது போன்று தெரிந்தது. ஆனால் 3ஆம் அம்பயர் அவுட் கொடுத்தார். இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல அமைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

இதனால் ரசிகர்கள் ஏமாற்று வேலை என்று கோஷமிட்ட தொடங்கினார்கள். அப்போது பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. அதனை தொடர்ந்து சேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து அம்பயரை விமரிசித்திருந்தார். மேலும் சுப்மன் கில்லும் தன்னுடய ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிந்திருந்தார். அப்படிப்பட்ட நிலையில் தான் நேற்று போட்டி முடிந்த பிறகு கேட்சை பிடித்த க்ரீன் செய்தியர்களிடம் பேட்டி கொடுத்திருந்தார்.

அந்த பேட்டியில் “இந்திய ரசிகர்கள் அவர்களுடைய விருப்பமான சுப்மன் கில்லை ஆட்டமிழக்க செய்ததினால் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விட்டார்கள். அவர் ஆட்டமிழந்ததால் நாங்கள் வெற்றியை நோக்கி முன்னேறி இருக்கிறோம். அந்த கேட்ச்சை நான் கண்டிப்பாக பிடித்து விட்டேன் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் சரியாக பிடித்து விட்டேன் என்பதை போலத்தான் இருந்தது. எனவே அது முற்றிலும் மூன்றாம் நடுவரின் முடிவு, அதற்கு அவர் அவுட்டும் வழங்கினார் என்று கூறினார் க்ரீன்.

நான் வளரும் போதே நான் கேட்சுகளை பிடிக்க அதிகமாக பயிற்சி எடுத்தேன். எப்போதுமே நான் இரண்டாவது ஸ்லிப்பாக நிற்க முயற்சி செய்திருக்கிறேன். சொல்லப்போனால் அதை என்னுடைய இளம் வயதில் இருந்து செய்து வருகிறேன். எனக்கு தெரியும் என்னால் சில நல்ல கேட்சுகளை பிடிக்க முடியும் என்று. முதல் நாளில் கேட்சுகளை விட்டதில் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஆனால் தற்போது சிறப்பாக விளையாடியது ஆறுதலாக இருக்கிறது என்று கூறினார் க்ரீன்.





