உலக கோப்பை இறுதி போட்டியில் சுப்மன் ஆட்டமிழந்தது குறித்து சர்ச்சையான கருத்துக்களை பல முன்னாள் வீரர்கள் கூறிவரும் நிலையில் அது குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியானது தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸை வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் அது தவறான முடிவு என்று பின்னர் தான் தெரிந்தது.

ஏனென்றால் இந்தியாவின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்ட ஆஸ்திரேலியா 2 வது நாளில் 469 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. மேலும் பந்துவீச்சில் சிற்ப்பாக செயல்பட்டு இந்தியாவை 296 ரன்களுக்குள் சுருட்டியது. மேலும் இரண்டவது இன்னிங்கை ஆடிய ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதனையடுத்த தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்றைய நாள் முடிவின் போது இந்தியா 164 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இந்நிலையில் இந்திய நான்காவது நாளில் ஆடும் போது ரோஹித் மற்றும் சுப்மன் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்கள். ஆனால் சிறப்பான ஆட்டத்திற்கு நடுவே சுப்மன் கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அந்த கேட்ச் சரியானதா என்று பார்க்க 3 அம்பயரிடம் சென்றபோது பந்து தரையில் பட்டது போன்று தெரிந்தது. ஆனால் 3ஆம் அம்பயர் அவுட் கொடுத்தார். இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல அமைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

ரிக்கி பாண்டிங் கொடுத்த பேட்டி :
இப்படிப்பட்ட நிலையில் தான் முன்னாள் ஆத்திரேலியா வீரரான ரிக்கி பாண்டிங் இந்த கேட்ச் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “நான் கேமரூன் க்ரீன் கேட்ச் பிடித்ததை நேரலையில் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அது சரியாக பிடிக்கப்பட்டது போன்று தான் எனக்கு தெரிந்தது. ஆனால் அதற்கு பிறகு பார்த்த ரீ பிளே காட்சிகளில் பந்து சரியாக பிடிக்கப்பட்டதா என்று எனக்கு தெரியவில்லை.
#ShubhamanGill out or not out ? pic.twitter.com/2Up4M3R4Ou
— Siddharth Dholakia (@SidDholakia) June 11, 2023
பந்தின் சிறு பகுதி தரையில் பட்டத்தை போன்று தான் தோன்றியது. ஆனால் இறுதி முடிவு அனைத்தும் மூன்றாம் நடுவருடையது, அவர் அவுட் கொடுத்து விட்டார்.கேமரூன் க்ரீன் பிடித்த இந்த கேட்ச் குறித்து ஆஸ்திரேலியாவை விடவும் இந்தியாவில் அதிகம் இந்த கேட்சை நாட்அவுட் என்று நினைப்பார்கள். அதே சமயம் ஆத்திரேலியாவில் உள்ளவர்கள் இது அவுட் என நினைப்பார்கள். ஆனால் இந்த விஷியத்தில் யார் சொல்வதையும் விடவும் மூன்றாவது நடுவர் கையில் தான் இறுதி முடிவு இருக்கிறது.
ஒரு வேளை மைத்தனத்தில் இருக்கும் அம்பயர்கள் நாட் அவுட் கொடுத்திருந்தால் அது இந்தியாவிற்கு சாதகமாக அமைந்திருக்கலாம்.ஏனென்றால் மைத்தனத்தில் இருக்கும் நடுவர் அவுட் கொடுத்திருந்தால் மூன்றாம் நடுவருக்கு அது ஒரு தடயமாக இருந்திருக்கும், ஆனால் நாட் அவுட் என்பதற்கு சரியாந தடயம் இல்லை என்று நான் நினைக்கிறன். இருந்த பதிலும் இறுதியில் மூன்றாம் நடுவரின் முடிவே இறுதி என்று கூறினார் ரிக்கி பாண்டிங்.




