இந்தியாவில் கிரிக்கெட் என்றாலே சச்சின் என்று தான் அனைவருக்கும் நியாபகம் வரும். சச்சின் டெண்டுல்கரின் “மாஸ்டர் பிளாஸ்டர்” எந்த பட்ட பெயர் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே எதிரொலிக்கிறது. அவருடைய கிரிக்கெட்டில் உபயோகிக்கும் நுட்பம் மற்றும் ஈடு இணையற்ற அர்ப்பணிப்புடன் விளையாடி 16 வயதில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் வீரராக உருவெடுத்தார்.

இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய வாழ்க்கையில் 24 ஆண்டுகளை செலவழித்தார். வியக்கத்தக்க 34,357 சர்வதேச ரன்களையும் 100 சதங்களையும் குவித்துள்ள இவரின் பல சாதனைகளை இன்னமும் யாராலும் முறியடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு முக்கியமான தருணம்.
டெண்டுல்கரின் தாக்கம் இந்திய கிரிக்கெட் விளையாட்டிற்கு அப்பாற்பட்டது, எண்ணற்ற ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கிறது. விளையாட்டின் சின்னமாக அவரது பெயர் என்றென்றும் வரலாற்றில் பொறிக்கப்படும், அது பல கோடிக்கணக்கான மக்களின் மனதில் என்றென்றும் நீக்காது இருக்கும். இப்படி இந்தியாவிற்கு பல பெருமைகளை சேர்த்த சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்று சொன்னால் உங்களினால் நம்ம முடியுமா?

பாகிஸ்தானுக்காக விளையாடிய சச்சின் :
ஆமாம் உண்மையில் கடந்த 1987ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்தது. இந்த நேரத்தில் ஒரு கண்காட்சி போட்டி ஓன்று நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் தான் பாகிஸ்தான் வீரருக்கு காயம் ஏற்பட்டது. அப்போதுதான் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் அணியில் மாற்று பீல்டராக விளையாடினார். ஆனால் சச்சின் அவர் என்று அப்போது கேப்டனாக இருந்த இம்ரான் கானுக்கு கூட தெரியாதாம்.

இது குறித்து சச்சின் டெண்டுலகர் தன்னுடைய சுய சரிதையான “பிளேயிங் இட் மை வே” என் வழி தனி வழி என்ற புத்தகத்தில் சச்சின் குறிப்பிட்டிருக்கிறார். ஜாவேத் மியான்டட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர அப்துல் காதர் மத்திய உணவுக்காக சென்றபோது இம்ரான் கான் பீல்டிங் செய்ய அனுமதித்துள்ளார். மேலும் அந்த போட்டியில் கபில் தேவை அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அதிக தூரம் ஆடிவந்த்தால் விக்கெட் எடுக்க வில்லை. இல்லைஎன்றால் பாகிஸ்தான் அணிக்காக விக்கெட் எடுத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.





