மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பல போட்டிகள் கொண்ட தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டியானது நடைபெற்றது. மேலும் WTC போட்டியில் சிறப்பாக செய்யப்பட்ட ரஹானேவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. கிடைத்த வாய்ப்புகளை ரஹானே தவறவிட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படிபட்ட நிலையில் தான் ரஹானே பேட்டிங் குறித்து பேசியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

தினேஷ் கார்த்திக் கூறுகையில் “ரஹானே இந்த தொடரில் மிகவும் சாதாரணமாத்தான் இந்த தொடரில் விளையாடியிருந்தார். அவர் உண்மையில் WTC இறுதிப் போட்டியில் மிகவும் சிறப்பாகவே விளையாடியிருந்தார். எனவே இந்தத் தொடருக்கான துணைக் கேப்டனாகவும் அஜாக்கியா ரஹானே தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு சில ஆச்சரியங்களும் இருந்தன. அவருக்கு தன்னுடைய பேட்டிங் திறமையை காட் தேவையான இரண்டு முறை சந்தர்ப்பங்கள் கிடைத்தது.
ரஹானே விஷயத்தில் பல காலமாக இரு விவாதமாக இருந்து வருவது நிலைத்தன்மை தான். அந்த காரணத்தினால் தான் அணியில் ரஹானே தன்னுடைய இடத்தை இழந்தார். அவருக்கு கண்டிப்பாக தெரியும் இந்த தொடரில் அவர் சரியாக செயல்படவில்லை என்று. என்றார் தினேஷ் கார்த்திக். மேலும் பேசிய அவர் கூறுகையில் “சுப்மன் கில் பேட்டிங் குறித்தும், அவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய திறமையை நிரூபித்தது குறித்தும் பேசியுள்ளார்.

சுப்மன் கில்ளிடன் இருந்து நல்ல செயல்திறனை எதிர்பார்க்கிறோம். டி20 போட்டிகளை போலவே, அவர் டெஸ்டிலும் மெதுவாகத் தொடங்குகிறார். சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எடுத்த ஸ்கோரைப் பார்த்தால். சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் தன்னுடைய முத்திரை பதித்துவிட்டார். இப்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய இடத்தைப் பிடிக்க, அவரிடம் திறமை உள்ளது.
அவருக்குத் தேவையான செயல்திறனை பெற கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். அவர் நன்றாக விளையாடும் போது மற்றவர்களில் இருந்து அவர் தனியாக தெரிகிறார் என்றார் தினேஷ் கார்த்திக். குறிப்பிடதக்க வகையில் ரஹானே மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்த நல்ல பார்மில் தான் இந்த போட்டிக்கு வந்தார்கள். கடந்த ஐபிஎல் 2023 ரஹானே 14 போட்டிகளில் விளையாடி 326 ரன்களில் 32.60 சராசரியுடன் இருக்கிறார்.

மேலும் கடந்த 2023 உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியிலும் அவர் முதல் இன்னிங்கில் 89 ரன்களும் இரண்டாவது இன்னிங்கில் 46 ரன்களையும் விளாசினார். மேலும் சென்னை அணியை ஐபிஎல் கோப்பையை வெல்ல வைத்த அவருக்கு இந்தியாவின் அடுத்த டெஸ்ட் போட்டி டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது. ஒருவேளை இந்த போட்டியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு இது கடைசி வாய்ப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.




