இந்தியாவின் முகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்பவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த இவர் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 500 போட்டிகளை விளையாடிய வீரர் என்ற சாதனனயை படைத்தார். மேலும் இன்னமும் கிரிக்கெட் வரலற்றில் தன்னுடைய 500வது போட்டியில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனைக்கு இனமும் 13 ரன்கள் உள்ளது.

மேலும் விராட் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை விளாசிய 5 வது வீரர் என்ற சாதனனை படித்துள்ளார். இந்த நிலையில் தான் தற்போது வர்ணனையாளராக இருக்கும் தினேஷ் கார்த்திக் விராட் கோலி குறித்து புகழந்து பேசியுள்ளார்.
தினேஷ் கார்த்திக் கூறியது :
கிங் கோலி என்று அனைவரும் அன்போடும் அழைக்கும் விராட் கோலி பல அழகான ஷாட்டுகள் விளையாடுவதை நாம் பார்க்க முடியும். அவர் அடிக்கும் கவர் டிரைவ்கள் மற்றும் புல் ட்ரைவ் போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும். விராட் கோலி தனது 500 வது போட்டியில் விளையாடுகிறார். ஆனால் அது அவருடைய ஐந்தாவது போட்டியைப் போலவே விளையாடுகிறார். ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற பசி அவருக்கு இந்த மைதானத்தில் உதவலாம்.
Virat Kohli – The GOAT. pic.twitter.com/ZhN7baISzV
— Johns. (@CricCrazyJohns) July 20, 2023
அவரினால் ஒரு மில்லியன் ஷாட்டுகளை விளையாட முடியுமானாலும், அவர் மனரீதியாக இருப்பதை உறுதிசெய்து, டீம் இந்தியாவுக்கு என்ன தேவையோ அதை செய்கிறார். அவர் அங்கேயே வெளியேரி முடிந்த அளவுக்கு ரன்களை விளாசுகிறார். 97 பந்துகளில் 50 ரன்கள் விளாசிய அவர் பின்னர் ஆட்டமிழக்காமல் நாள் முடிக்கு வரையில் ரவீந்திர ஜடேஜாவுடன் நல்ல பார்ட்னெஷிப்பை அமைத்துள்ளார். அவர் தான் விராட் கோலி.
If Virat Kohli scores 195* then his Test average will be 50. pic.twitter.com/JfQLZikQpR
— Johns. (@CricCrazyJohns) July 21, 2023
ராகுல் டிராவிட் அவரைப் பற்றி பேசுவதை நீங்கள் கேள்விப்பட்டிருந்தால், அவர் சொன்ன இரண்டு விஷயங்களும் மரியாதை மற்றும் அவரது தியாகங்கள் என்றார் கார்த்திக். அவர் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை விளையாடுவார். அனால் அது மிகவும் அருமையாக இருக்கிறது என்று சொல்ல முடியாது ஆனால் அதனை கணக்கில் கொண்டு வருகிறார் என்றார் தினேஷ் கார்த்திக்.
குறிப்பிடதக்க வகையில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஐந்தாவது அதிக ரன்களை விளாசிய தென் ஆபிரிக்க பேட்ஸ்மேன் ஐகியூஸ் காலிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் 25,534 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவருடைய சாதனையை முறியடித்து தற்போது விராட் கோலி 25,548 ரன்களில் இருக்கிறார். மேலும் விராட் கோலி தன்னுடைய 500வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளாடியதுடன் 53.67 என்ற சராசரியை 75 சதங்களையும் 131அரை சதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.




