வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் அடுத்த 3 வது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஷஸ் 5வது போட்டியானது கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை முடிவு செய்தது. இந்நிலையில் முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 283 ரன்கள் அடித்த நிலையில் இரண்டவது இன்னிங்கில் 295 ரன்களை அடித்தது ஆஸ்திரேலியா.
இதனை தொடர்ந்து இரண்டவது இன்னிங்கில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி 395 ரன்களை விளாசியது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்கை ஆடிவரும் ஆஸ்திரேலியா ஏற்கனவே கிட்டத்தட்ட 238 ரன்களை 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து எடுத்து விட்டது. இந்நிலையில் இந்த போட்டி மழை காரணமாக தற்போது நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணிக்கு இந்தப்போட்டியில் வெற்றிபெற 7 விக்கெட்டுகள் தேவை பட்டது.

இதனை தொடர்ந்த மழை நின்ற பிறகு மீண்டும்,ஆச்சரியமாக போட்டி மீண்டும் தொடங்கியது, ஆனால் இங்கிலாந்து அணிக்கு மியாகவும் குறைவான நேரமே இருந்தது. இருந்த போதிலும் அவர்களின் நம்பிக்கை குறையவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தார்கள். மறுபுறம் ஆஸ்திரேலியா பலமான 73வது ஓவரின் போது 262 ரன்களுக்கு 3 விக்கட்டுகளை மட்டுமே இழந்து மிகவும் வலிமையாக இருந்தது. மேலும் ஸ்மித்தின் விக்கெட்டை எடுக்க ஸ்டோக்ஸ் தவறி விட்டார்.
இதனால் இங்கிலாந்து அணி தோற்றுவிட்டதாகவே அனைவரும் நினைத்தார்கள். ஆனால் அதற்கு பிறகுதான் இங்கிலாந்து அணிக்கு அதிசயம் நடந்தது. அதாவது 74 வது ஓவரில் திறமையாக விளையாடி கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டை மொயின் அலி ஆட்டமிழக்க செய்தார். இதனை தொடர்ந்து 54(94) என நங்குறமாக நின்று கொண்டிருந்த ஸ்மித்தின் விக்கெட்டை கிறிஸ் வோக்ஸ் வீழ்த்தினார். இதற்கு பிறகுதான் இங்கிலந்து ரசிகர்களுக்கு மிண்டும் நம்பிக்கை பிறந்தது.

இருந்த போதிலும் ரன்கள் அப்போது குறைவாகவே தேவைப்பட்டதினாலும் இங்கிலாந்து அணிக்கு குறைவான நேரம் இருப்பதினாலும் யார் வெற்றியடைவார்கள் என்ற குழப்பம் அனைவருக்குமே இருந்தது. இந்நிலையில் மிட்சல் மார்ஸ் 6(9) ரன்களிலும் மிட்சல் ஸ்டார்க் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய னையின் கேப்டன் பாட் கம்மிங்ஸ் போட்டியை கட்டுப்படுத்த முயன்றாலும் அவரும் 9(14) ரன்களில் ஆட்டமிழந்தார்
Broady’s celebration 🤣
— England Cricket (@englandcricket) July 31, 2023
We’re going to miss you @StuartBroad8 ❤️#EnglandCricket | #Ashes pic.twitter.com/RkN4GVdEPv
ஆனால் இதற்கு பிறகு கூட்டு சேர்ந்த அலெக்ஸ் கார்லி மற்றும் டாட் மார்பி இருவரும் இணைந்து விக்கெட் கொடுக்காம் பயம் காட்டினாலும் அவரது விக்கெட்டியயும் பிராட் வீழ்த்தினார். பின்னர் போட்டி முடிவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் கடைசி விக்கெட்டை ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தி இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த ஆஷஸ் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
A fairytale ending for a legend of the game.
— England Cricket (@englandcricket) July 31, 2023
Broady, thank you ❤️ #EnglandCricket | #Ashes pic.twitter.com/RUC5vdKj7p
மேலும் இந்த போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட்டுகளையும், அற்புதமாக விளையாடிய கிரிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், மொயின் அலி 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். மேலும் மழை குறுக்கிட்டு கேட்ச் விட்டு பல விமர்சனங்களுக்கு உள்ளாகிய இங்கிலாந்து அணி வெற்றிகரமாக தங்களுடைய மண்ணில் தோல்வி பெறாமல் டிரா செய்ததை பல ஜாம்பவங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.





