இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவருமாகிய சவுரவ் கங்குலி கிட்டத்தட்ட 18 மாதங்களாக டெஸ்ட் துணைக் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டது குறித்தது தன்னுடைய கருத்தை தெரிவினத்துளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்டத்திற்குத் திரும்பிய ரஹானே, ஜூன் மாதம் முன்னதாக ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 89 மற்றும் 46 ரன்கள் எடுத்தார்.

மேலும் அவருடைய செயல்திறன் முன்பு இருந்ததை விடவும் சிறப்பாக இருந்தது. அதே போல சென்னை அணிக்காக ஐபிஎல் 2023 தொடரில் விளையாடிய ரஹானே பல சூழ்நிலைகளில் சிற்பபாக விளையாடி தான் மீண்டும் களத்திற்கு வந்து விட்டேன் என்பதை பேட்டிங் மூலம் கூறினார்.
இனில்ஹயில் தான் இடைக்காலத் தலைவர் சிவசுந்தர் தாஸ் தலைமையிலான தேர்வுக் குழு, டொமினிகா மற்றும் டிரினிடாட்டில் நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான துணைக் கேப்டனாக ரஹானேவை மீண்டும் நியமித்தது. டெஸ்ட் தொடரைத் தவிர, இந்திய அணி தனது பயணத்தின் போது மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் தற்போது அந்த டெஸ்ட் போட்டிகள் 23-25 டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகளுக்கான சுழற்சியாகும்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் கேப்டனாக துணை கேப்டன் பதவிக்கு சுப்மான் கில் போன்ற ஒருவரை நியமிப்பது நன்றாக இருந்திருக்குமா? என்று கேள்வி எழுப்பிய போது பதிலளித்த முன்னாள் பயிற்சயாளரான கங்குலு ரஹானே மீண்டும் டெஸ்ட் தொடருக்கு தனக்கு மகிழ்ச்சியாக் இருந்தாலும் அவர் துணை கேப்டனாக உயர்த்தப்பட்டதன் பின்னணியில் உள்ள செயல்முறையை தன்னால் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில் “இந்தா விஷயத்தை நான் ஒரு படி பின்னோக்கிச் சொல்லமாட்டேன். அவர் 18 மாதங்களாக அணியில் இறுதி வெளியே இருந்தது அதற்கு பிறகு டெஸ்டில் துணை கேப்டன் பதவி கிடைப்பது என்ற சிந்தனையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ரவீந்திர ஜடேஜா நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டிகளில் உறுதியாக இருப்பவர். அவ்ருடைய தேர்வு என்பது நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்றார் கங்குலி.
மேலும் செதேஷ்வர் புஜாராவின் ஆட்டம் பற்றி தேர்வாளர்களுக்கு சரியாக தெரியும் என்று சவுரவ் கூறய கங்குலி ” தேர்வுக்குழுவினருக்கு புஜாராவை பற்றி தெளிவான யோசனை இருக்க வேண்டும். அவர் இனி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டுமா? அல்லது இந்திய அணி இளைஞர்களுடன் தொடர விரும்புகிறீர்களா? என்பது சரியாக தெரிய வேண்டும். புஜாரா போன்ற ஒருவரை அணியில் எடுத்து, பின்னர் கைவிட்டு மீண்டும் எடுக்க முடியாது அதே போல் தான் அஜிங்க்யா ரஹானேவும் என்றார் முன்னாள் இந்திய அணி வீரர் கங்குலி.





