உலக சாம்பியன் ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைத்தனத்தில் இன்று முதல் தொடங்கி 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு இந்தியாவிற்கும் இடையே நடக்கும் அனைவரது கணவத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து வரும் ஐசிசி போட்டிங்களில் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணிக்கு இது ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று அனைவரும் இந்த போட்டியை ஒற்று நோக்கி கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸை வென்ற ரோஹித் சர்மா பந்துவீச முடிவு செய்தார். மேலும் 4 வேக்கபந்து வீச்சாளர்களுயும் களமிறங்கினார் ரோஹித். மேலும் விக்கெட் கீப்பராக பரத், சூழல் பந்து வீச்சாளராக ஜடேஜா என தேர்வு செய்த அவர் சிறந்த டெஸ்ட் பவுலரான அஸ்வினை இந்த போட்டியில் விளையாட விடாதது அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் தான் ரோஹித் எடுத்த இந்த இரண்டு முக்கியமான முடிவுகள் குறித்து பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கங்குலி, ரோஹித் செய்த்தை விமரிசித்து பேசியுள்ளார்.
கங்குலி கூறியது :
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய கங்குலி கூறுகையில் “இந்த போட்டியில் நான் டாஸை வென்றிருந்தால் முதலில் பந்து வீசியிருக்க மாட்டேன். இருந்தாலும் இது ஒரே ஒரு போட்டி என்பதினால் ரோஹித் இப்படி செய்திருக்கிறார். ஒருவேளை இது தொடராக இருந்தால் பேட்டிங்கை தேர்வு செய்திருப்பார். ஆனால் கடந்த இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வென்றது. 190 ரங்களுக்கு ஆட்டமிழந்தாலும் 5வது நாளில் வெற்றி பெற்றனர்.

டாஸை வென்று பந்துவீசுவதினால் இந்திய அணிக்கு எந்த விதமான உபயோகமும் இல்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் முதல் இன்னிங்கில் அதிக ரன்களை அடிக்க வேண்டும் என்றார். மேலும் அஸ்வின் விளையாடாதது குறித்து பேசிய அவர் “அஸ்வின் பற்றி முடிவெடுத்த பின்னர் பேசப்படுகிறது. இதனை நான் நம்புதில்லை. பொதுவாக ஒரு கேப்டனாக போட்டிக்கு முன்னர் அணி குறித்து முடிவை எடுப்பார்கள்.
அந்த வகையில் இந்திய அணி கடந்த வருடங்களில் 4 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து சிறப்பாக பந்துவீசியிருக்கிறது.இருந்த போதிலும் இந்த சாம்பியன் ஷிப் உலகக்கோப்பையில் என்னை கேட்டால் நான் ரோஹித் போன்று யோசித்திருக்க மாட்டேன். நான் கேப்டனாக இருந்தால் உலக தரம் வாய்ந்த சிறப்பான பந்துவீச்சாளரான அஸ்வினை வெளியே வைத்திருக்க கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றார் கங்குலி.

அஸ்வின் நவீன கால டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்தியாவிற்கு பல முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து கொடுத்துள்ளார். சொல்லப்போனால் WTC பைனலுக்கு இந்திய அணி வருவதற்கு முக்கியமான காரணங்களில் அஸ்வின் பந்துவீச்சும் அடக்கும் என்பது குறிப்பிடதக்கது.





