சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளில் கோப்பைகள் எவற்றையும் வெல்லவில்லை. இந்நிலையில் இந்த உலக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த தொடர் தோல்விக்கு இந்திய அணி முடிவு கட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்ட வசமாக உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவிடம் படு தோல்வியடைந்தது. இது அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.

சொல்லப்போனால் இந்தியா முதல் இன்னிங்கிலேயே தோற்று விட்டது. இருந்த போதிலும் இந்தியா இரண்டாவது இன்னிங்கில் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினால் அது தாமதாக சென்று 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தான் இந்த தோல்வியை வைத்து இந்திய அணியின் எதிர்கால டெஸ்ட் கிரிக்கெட் அணியை குறித்து எந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி.
கங்குலி கூறியது :
இது குறித்து அவர் கூறுகையில் ” “ஒரே ஒரு தோல்விக்காக நாம் சட்டெண்டு முடிவெடுக்க வேண்டாம், இந்தியாவில் எப்போதும் வீரர்களின் திறமை இருக்கும். மேலும் விராட் கோலி அல்லது சேதேஷ்வர் புஜாராவைத் தவிர்ந்து வேறு வீரர்களை பார்க்க வேண்டிய நேரம் இது கிடையாது என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் விராட் கோலிக்கு வயது வெறும் 34 தான் ஆகிறது என்று பிரபல செய்தி ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார் கங்குலி.

மேலும் பேசிய அவர் கூறுகையில் இந்தியாவில் மகத்தான வீரர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அதை நீங்கள் சில போட்டிகளைப் பார்க்கும்போது தெரியும். ஆனால் நான் டெஸ்ட் கிரிக்கெட்டை பற்றி பேசுகையில் ஐபிஎல் போட்டிகளை நான் கருத்தில் கொள்ளவில்லை. சொல்லப்போனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் சில அருமையான வீரர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கும்போதுதான் அவர்களை நம்மால் கண்டு பிடிக்க முடியும்.
ஜெய்ஸ்வாலாக இருந்தாலும் சரி, வங்காளத்தைச் சேர்ந்த அபிமன்யு ஈஸ்வரன் இருந்தாலும் சரி அனைவரும் நிறைய ரன்களை அடித்தார்கள். ஷுப்மான் கில்லிக்கு வயது இருக்கிறது , ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் நான் பேசுவதை கேட்கிறார்கள் என்று நம்புகிறேன். குறிப்பாக இந்த சூழ்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன் என்று கூறினார் கங்குலி.
இந்நிலையில் கடந்த 2018 ஆசியக் கோப்பையில் முதுகில் காயம் ஏற்பட்ட பிறகு 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆல்-ரவுண்டராக இருந்து வருகிறார் பாண்டியா. கடந்த 2022 ஐபிஎல் மற்றும் 2023 போட்டியின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதி போட்டிவரையில் அழைத்துச் சென்றது மற்றும் கடந்த ஆண்டில் பல சந்தர்ப்பங்களில் இந்திய T20I மற்றும் ODI அணிகளை வழிநடத்தியது போன்றவற்றை அவர் சிறப்பாக செய்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா கூறியது :
இருப்பினும் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த காயத்திலிருந்து அவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பவில்லை, அவரது கடைசி டெஸ்ட் போட்டி 2018 செப்டம்பர் தான். இந்நிலையில் WTC இறுதிப் போட்டிக்கு முன் பாண்டியா பேசிய பேட்டி ஒன்றில் “நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்பினால், நான் எனது நிலையைப் பெறுவேன். என்னுடைய நிலையை திரும்ப பெற்று வருவேன். ஆனால் உண்மையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலோ அல்லது எதிர்காலத்தில் எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலோ “எனக்கான நேரம் வந்துவிட்டது என்று உணரும் வரையில் நான் டெஸ்ட் விளையாட மாட்டேன் என்றது குறிப்பிடதக்கது.





