ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 2023 இன் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இதுவரை அந்த அணியின் சிறப்பாக விளையாடி இருந்தனர். ஸ்மித் 121 ரன்கள் எடுத்தார், அதேசமயம் ஹெட் 163 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவினார்.

இந்நிலையில் இதற்கு பிறகு முதல் இன்னிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞிசியது ஐபிஎல் போட்டிங்களில் சொதப்பினாலும் இங்கே கலக்குவார் என்று நினைத்த ரோஹித் ஷர்மா 26 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் பேட் கம்மிங்கிடம் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இந்திய பெரிய நம்பிகை வைத்து களமிறங்கிய சுப்மன் கில் தேவையில்லாமல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரர் புஜாரா 14 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
அதுவும் ஐபிஎல் நாயகன் சுப்மன் பந்தை தவறாக கணக்கிட்டு ஆட்டமிழந்த நிலையில் அதே பின்று புஜாராவும் ஆட்டமிழந்தது அவைவரிடத்திரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி 100 க்கும் மேல் டெஸ்ட் ஆடிய அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களே முக்கியமான நேரத்தில், அதுவும் பைனல் போட்டியில் இப்படி மோசமாக ஆட்டமிழப்பது குறித்து பலர் விமர்சித்துவரும் நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி இந்திய அணியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்
Shubman Gill was drastically leaving the ball with poor IQ level and got wicket out on in swing delivery by Aussies fast bowler….. #WTC2023Final pic.twitter.com/ktXftJBfsh
— The Hood (@AsiaThehood) June 8, 2023
சுப்மன் கில் இளம் வீரர் என்பதால் கற்றுக்கொள்வர், ஆனால் தான் புஜாராவின் பேட்டிங்கில் ஏமாற்றம் அடிந்தாக பேசியுள்ளார் ரவி சாஸ்திரி. இது குறித்து அவர் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கூறுகையில் “பந்து வீச்சை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விட்டுச் செல்வதற்குத் தேவையான கால் அசைவுகளை புஜாரா சரியாக கொடுக்கவில்லை. அந்த பந்துகளை முன் கால் குறுக்கே சென்றுவிட்டதால் அது மோசமாக அமைந்தது. அது பந்தை நோக்கிச் அவர் அடிக்க செய்திருக்க வேண்டும்.

அவர் அந்த பந்தை விட்டுவிடலாமா? அல்லது அடிக்கலாமா? என்று யோசித்தார். பின்னர் அதை விட்டுவிடலாமா என்று முடிவு செய்தார். ஆனால் அவர் அதை விட்டு வெளியேறும் போது ஆஃப் ஸ்டம்ப் சரியாக தெரிகிறது. ஸ்டாம்புகளை மறைக்காமல் முன் பாதம் ஆஃப் ஸ்டம்பை நோக்கியே இருக்கிறது. ஆனால் அந்த சமயத்தில் புஜாரா சரியாக கால் அசைவுகளை பயன்படுத்தவில்லை. பந்து ஆஃப் சைடில் பட்டதால் அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இருப்பதாக நினைத்தார். ஆனால் அந்த முடிவில் தான் பிழை ஏற்பட்டது என்றார் ரவி சாஸ்திரி. மேலும் பேசிய அவர் கூறுகையில் “
மேலும் இங்கிலாந்தில் பந்தை விட்டு வெளியேறுவது பற்றி நாம் பார்க்கும் போது ஆஃப் ஸ்டம்ப் எங்கே என்று தெரிந்துகொள்வதைப் பற்றி எப்போதுமே கவனம் செலுத்த வேண்டும். சுப்மன் ஆட்டமிழந்த போது ஆஃப் ஸ்டம்ப் எங்கே என்று அவருக்கு தெரியவில்லை. சுப்மன் கில் தனது கால்அசைவுகளில் கொஞ்சம் சோம்பேறியாக இருக்கிறார். அவர் இளம் வீரர் தான் எனவே கற்றுக்கொள்வார். ஆனால் புஜாரா அப்படி ஆட்டமிழந்த்தை பார்ப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறினார் ரவி சாத்திரி .




