தற்போது நடந்துவரும் டெஸ்ட் சாம்பியன் ஷிப் உலகக்கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தற்போது லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியா சற்று அழுத்தத்தில் இருந்தது. இருப்பினும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

இறுதிப் போட்டியின் முதல் நாளில் தலை சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் தற்போது 174 பந்துகளில் 163 ரன்கள் எடுத்து முகமது சிராஜிடம் ஆட்டமிழந்தார். அதே நேரத்தில் அவரது கூட்டாளி ஸ்மித் 268 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து அசத்தினார். இவர்களது அபாரமான பார்ட்னர்ஷிப்பின் மூலம், ஆஸ்திரேலிய அணி நாள் ஆட்ட நேர முடிவில் மேலும் விக்கெட் இழப்பின்றி 327 ரன்கள் எடுத்துள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில், சமீபத்தில் முடிவடைந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் நாக்பூரில் இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் முதல் டெஸ்டில் ஹெட் தேர்வு செய்யப்படவில்லை. அவரது ஒட்டுமொத்த டெஸ்ட் எதிர்காலம் பற்றி பேசுகையில் தன்னை அணியில் இருந்து கழற்றி விடுவது அதிகம் தொந்தரவு செய்யாது என்று குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் பேசியுள்ள பேட்டியில் “என்னைத் அந்த விஷயம் பெரிய தொந்தரவை செய்யவில்லை. நான் இருக்கும் இடத்தில் இருப்பதும், நான் செய்வதை நினைத்தும் எனக்கு பெருமையாக இருக்கிறது. எங்களிடம் மிகவும் வலுவான வீரர்கள் இருக்கின்றனர். வீரர்களை தேர்வு செய்வது என்பது எப்போதும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. கடந்த காலத்தில் அது என்னுடைய கையை மீறி சென்று விட்டது. நான் செய்வதெல்லாம் என்னுடைய விளையாட்டை சரியாக தொடர்ந்து விளையாடிவருவதுதான் என்றார்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “நான் ஒவ்வொரு டெஸ்டிலும் விளையாட விரும்புகிறேன் ஆனால் அது எப்போதும் அப்படி இருக்காது. இது போன்ற தருணங்களுக்கு இது நல்ல முன்னேற்றத்தை அளிக்கிறது. எதிர்காலத்தில் அதிகமாக என்னை அணியில் இருந்து கழற்றி விடமாட்டார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த போட்டி எனக்கு பெரிதாக தெரியவில்லை ஏனென்றால் கடந்த கால போட்டிங்களில் நான் எடுத்த சில முடிவுகள் சரியான வழியில் செல்லவில்லை.
ஆனால் என்னுடைய அணிக்காக விளையாடுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக உணர்கிறேன். கேப்டன், சக வீரர்கள் மற்றும் அணியின் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் எனக்கு ஆதரவு அளிப்பது மகிழ்ச்சியாக் இருகிற்து என்று கூறினார் டிராவிஸ் ஹெட். தற்போது நடந்துவரும் போட்டியை பொருத்தவாயில் ஆஸ்திரேலிய அணி 108 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 420 ரன்களை அடித்துள்ளது.




