தற்போது நடந்து முடிந்த 2013 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை சேர்ந்த சுப்பன் கில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கிட்டத்தட்ட அனைத்து போட்டியிலும் தன்னால் முடிந்த அளவுக்கு திறமைகளை காட்டி ரசிகர்களை கவர்ந்தார் மேலும் மேன் ஆஃப் தி டோர்னமெண்ட் விருதையும் பெற்றார். மேலும் 23 வயதான அவர் ஐபிஎல் லீக்கில் ஆரஞ்சு தொப்பியை 17 போட்டிகளில் 890 ரன்களை மூன்று சதங்களை அடித்த பிறகு வென்றார்.

ஐபிஎல் சீசனில் இரண்டாவதாக அதிக ரன்கள் எடுத்த ஜோஸ் பட்லரின் சாதனையை கில் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாக விராட் கோலி ஒரு சீசனில் அதிக ரன் அடித்தோர் பட்டியலில் இருக்கிறார். மேலும் குஜராத் அணி இரண்டாவது முறையாக ஐபிஎல் போட்டியில் பைனல் வந்தது மிகப்பெரிய ஒரு காரணம் ஏன் என்றால் அது சுப்மன் கில்லை சொல்லலாம். சில போட்டிகளில் இவர் அடித்த ரன்கள் மிகவும் முக்கியமானதாக இருந்துள்ளது.
குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் எதிராக இவர் அடித்த 129 ரன்கள் போட்டியை வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்கு வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் ஐபிஎல் பைனல் போட்டியில் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் தோல்வியை தழுவினார். இதனால் குஜராத் அணி சென்னை அணியிடம் தோல்வியை தழுவி இரண்டாவதாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது.

இப்படிப்பட்ட நிலையில் தான் சுப்மன் கில் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது “SpiderMan Across The SpiderVerse” என்ற படத்தில் வரும் இந்தியன் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் பவித்ர் பிரபாகருக்கு இந்தியிலும், பஞ்சாபியிலும் டப்பிங் செய்துளளர் சுப்மன் கில். இந்நிலையில் அந்த பேட்டியில் சுப்மன் தொடக்கத்தில் ஸ்பைடர் மேன் போன்று கட்டிடங்களை தாண்ட விரும்புவதாகக் கூறினார்.
ஆனால் ஒரு நாள் ஸ்பைடர் மேனாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஸ்பைடர் சென்ஸைப் பயன்படுத்தி பந்துகளைப் பிடிக்க விரும்புவதாகக் கூறினார். மேலும் வரும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நான் ஸ்பைடர் மேனாக இருக்க விரும்புகிறேன், ஏனென்றால் எனக்கு ஸ்பைடர் உணர்வு இருக்கும், மேலும் என்னால் பந்துகளைப் அதனை பயன்படுத்தி எளிதாக பிடிக்க முடியும் என்றார் சுப்மன் கில்.

இதனிடையே சுப்மன் கில் வரவிருக்கும் WTC இறுதிப் போட்டியிலும், ODI உலகக் கோப்பையிலும் இந்தியாவின் முக்கிய வீரராக களமிறங்குகிறார். ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கில் உலகக்கோப்பையில் அப்படியே சிறந்து விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கில் டெஸ்ட் கோப்பைக்காக இங்கிலாந்து சென்றுள்ளார்.





