மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி இரண்டு புது இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்ப விளையாட்டை விளையாடி 171 ரன்களை குவித்தார். இதற்கு பல கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது. அதே போல இஷான் கிஷனும் தன்னுடைய சார்பில் சில விக்கெட் கீப்பராக அற்புதமான கேட்சுகளை பிடித்தது இந்தியாவிற்கு வெற்றி பெற உதவினார்.

இதனால் இந்திய அணியானது 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டியின் இரண்டாவது இன்னிங்கில் 31 வது ஓவரில் ஜடேஜா பந்துவீச அந்த ஓவரின் 4வது பந்தில் இஷான் கிஷான் தந்திரமான விக்கெட்டை எடுக்க முயன்றார். அதாவது அந்த ஓவரில் பேட்ஸ்மேன் ஹோல்டர் கிரீஸில் இருந்து வெளி வெல்வதற்கு காத்துக்கொண்டிருந்த இஷான் கிஷான் ஸ்டெம்புகளை தாக்கினார். ஆனால் அந்த விக்கெட்டை எடுப்பதற்குள் ஹோல்டர் மீண்டும் ஸ்டெம்புகளை தாக்குவதற்கு முன்னதாக கீரிசுக்குள் வந்து விட்டார்.
இதனையடுத்து இதே போன்ற ஒரு சம்பவம் 33வது ஓவரில் நடந்தது. ஆனால் இந்த முறை மைத்தனத்தில் இருந்த அம்பயர்கள் அந்த ஓவர் முடிந்து விட்டதாக அறிவித்து நாட் அவுட் கொடுத்தனர். இப்படி தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் ரன்கள் அடிக்காமல் விட்டாலும் இந்த சம்பவத்தின் மூலம் ஒரு அனைவரது கவனத்தையும் பெற்றார். மேலும் அவரது விக்கெட் கீப்பிங் திறமையும் நன்றாகவே இருந்தது.
— Nihari Korma (@NihariVsKorma) July 15, 2023
இந்நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் போட்டியில் நடைபெற்றது. தற்போது நடந்து வரும் வரும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின் மிகமுக்கியமான நேரத்தில் ஆஸ்திரலேயா ஜோனி பேர்ஸ்டோ விக்கெட்டிங் வீழ்த்தியது. இது அந்த போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக மாறி இங்கிலாந்து அணியானது ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது.

ஆனால் இந்த விக்கெட்டானது எடுக்கப்பட்ட போது ஜோனி பேர்ஸ்டோ பந்து விக்கெட் கீப்பரிடம் சென்ற பிறகு பென் ஸ்டோக்ஸுடன் பேச வெளியே சென்றார். ஆனால் அப்போது விக்கெட் கீப்பராக இருந்த அலெக்ஸ் கேரி ஸ்டெம்புகளை தாக்கி விக்கெட் எடுத்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி இரண்டு நாட்டின் ஊடகங்களுமே மோதிக்கொண்டது குறிப்பிடதக்கது. மேலும் அந்த ஸ்டெம்பிங் தான் அந்த போட்டியின் நிலைமையையே மாற்றியது என்று கூட சொல்லலாம்.




